Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Eastern லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Eastern லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

கல்முனையில் இரண்டாம் கட்ட பட்டதாரி பயிலுனர் நியமனம் வைப்பு...!

 பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் கல்முனையில் வழங்கி வைப்பு...!


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!



இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்
எம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)
பிப்ரவரி 03, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது 

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்பில் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.


வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. 


போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 )  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி


பிப்ரவரி 02, 2021

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


(யு.எம்.இஸ்ஹாக்,சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அண்மையில் எழுதி வெளியிட்ட "நிதி முகாமைத்துவம் " நிதிப்பிரமாணங்களும் ,நிதி நடைமுறைகளும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. 
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் கல்வியியலாளர்களை கெளரவப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறுமதி வாய்ந்த இந்த நூலை வெளியிட்டு வைத்ததை முன்னிட்டு கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்வை அவரது வீடு தேடி சென்று வாழ்த்தி நினைவு சின்னம் , நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையிலான அமைப்பின் குழுவினர் நேற்று இரவு கணக்காளரின் வீட்டுக்கு சென்று இந்த பாராட்டு நிகழ்வை நடாத்தினர்.
நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


பாராட்டைப் பெற்ற கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில் நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன் பல கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றேன் ஆனால் என்னை வீடு தேடிவந்து பாராட்டிய இந்த நிகழ்வு என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது . இதனை என் வாழ்வில் ஒரு போதும் மறந்து விட முடியாது. இதற்காக நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பினருக்கு உள்ளார்த்தமான நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அதிபர்களான வீ.எம்.ஸம்ஸம் ,ஏ.எம்.சாலிதீன் மௌலவி ,திருமதி ஏ.முனாஸிர்,ஆசிரியர் ஏ.எல்.அஷ்ரப் , அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

 'சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதியினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை மைதானமும் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். கடந்த  40 வருடமாக எந்தவிதமான அபிவிருத்தியுமில்லாது காணப்பட்ட எமது அல்மர்ஜான் மைதானத்தை, பாடசாலையின் அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க, இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு  அயராது முயற்சி செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கும்  மற்றும் அவரது இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களுக்கும்எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி



 குறிப்பு:  ஏற்கனவே சகோதரர் ARM.றபீக் (தௌபீக்) அவர்களின் முயற்சியின் பலனாக சப்றிகம வேலைத்திட்டதின் கீழ் எமது பாடசாலைக்கு நீர்ப்பாசன மற்றும் மின்சார புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 9 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!

 கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு  இன்று (26) பிற்பகல் நிறைவு பெற்றது.

கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்   மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (14) வியாழன் கொடியேற்றம் ஆரம்பமாகிகடந்த 12 தினங்களாக  இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!



இதன் போது மெளலித் ஷரீப் பாராயணம்,  மற்றும் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன்  குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக   விடுபட வேண்டி  விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
  
இதன் போது உலமாக்கள்,  அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,சுகாதார பிரிவினர்  பள்ளிவாசல் நிர்வாகிகள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா  தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 27, 2021

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்


காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின்  முன் மாதிரியான செயல்பாடு...!!!!


காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடமையாற்றும் லொக் டவுன்  பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டன

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்

இவர்களில் காத்தான்குடியில் லொக்டவுன் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு   லொக் டவுன் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரிய  வெளிப்படுத்தியுள்ளனர்

இவ்வாறு 56 ஆசிரியர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் S..H. பிரதெளஸ் அவர்களிடம் குறித்த  ஆசிரியர்கள் இன்று கையளித்தனர்
சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்



இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி M.A. அதிபர் நிஹால்  கலந்து கொண்டார்

நானும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பணி புரிவதில் பெருமையடைகிறேன்.

 தனிமைப் படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை முன்மாதிரியான செயற்பாடாகும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
27.01.2021

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.

 சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வயின்னாயிலஹி ராஜியுன் 

வித்தகர் விருது பெற்று விடைபெற்றார்.

அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.



யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திற்திற்றேன்.
ஜனவரி 24, 2021

பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு

 (றியாத் ஏ.மஜீத்)


சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.

கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.

இவர் சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் ஜப்பார் தம்பதியினரின் புதல்வியாவார். கணவர் எம்.ஐ.எம்.லரீப் பொது கணக்கு பரிசோதகராவார்.



சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.நஜிமுதீன் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

மிக முக்கிய அறிவித்தலின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தல்

 Deen Fairoos Journalist

இப் பகிரங்க அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கான முறைப்பாடுகளை முன்வைக்கும் கால எல்லை எதிர்வரும் 31/01/2021 உடன் முடிவடைய இருந்தது.

கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்த போது இவ்விடயம் தொடர்பிலும் பேசினோம்.

கொரோனா காரணமாக அதிக மக்கள் விண்ணப்பிக்கவில்லை.

விண்ணப்ப முடிவு காலத்தை மேலும்  நீடிக்குமாறு கோரினோம்.

எதிர் வரும் பெப்ரவரி 2021 இறுதி வரை அதாவது மேலும்  ஒரு மாதம்  காலத்தை நீடிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

விடயம் இதுதான்

ஆளுநரின் அறிவித்தலை அப்படியே தருகின்றேன்.

பொது அறிவித்தல்

கடந்த நான்கு தசாப்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஏதாகியினும் ஒரு பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற  செயற்பாடுகள் அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான தனி நபர்கள் அல்லது குழுக்களின் கவனத்தை  ஈர்க்கும்  பொது அறிவித்தல்

மேற்சொன்னதே விடயத்தின் தலைப்பு

இனி விபரம் வருமாறு:--

கிழக்கு மாகாண மக்கள்  மத்தியில்  நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வினை

உறுதிப்படுத்தும் நோக்குடன் அதனோடு இணைந்த இடைநேர்விளைவான விடயங்களை  எடுத்துரைக்கும் வகையிலும் கிழக்கு மாகாணத்தினுள்  ஏற்பட்டுள்ள அனைத்து  வகையான சமூக அநீதிகள் பற்றிய  முறைப்பாடுகள்,கோரிக்கைகள் மற்றும்  மேன்முறையீடுகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று அவற்றின் ஆழத்தினை விளங்கி,ஆய்வு செய்து பொருத்தமான  பரிந்துரைகளை வழங்கவென கிழக்கு  மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள் நிபுணர் குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த ஏதேனும்  சமூக அநீதிகளுக்காக நீதியை எதிர்பார்க்கும்  எந்த  ஒரு தனி நபரும் அல்லது குழுவானவர்களும் அவர்கள் எந்த  வகையில்  பாதிக்கப்பட்டார்கள் அல்லது  தொடர்ச்சியாக பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்னும் மனக்குமுறல்களை உறுதிப்படுத்தப்பட்ட  அதிகாரபூர்வமான ஆவணங்களுடன் (மூல ஆவணங்கள் அன்றி பிரதிகளுடன்) ஏதேனும் பெயரை உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது  அவர்களின் கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் துணை ஆதாரங்கள் சகிதம்

"கிழக்கு மாகாணத்தினுள் சமூக  அநீதிகளை ஆய்வு  செய்வதற்கான நிபுணர் குழு "

 என்று தலைப்பிட்டு கீழ் குறிப்பிடும் முகவரிக்கு  பதிவுத்தபாலில்

அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மாதிரி விண்ணப்ப படிவம்

1) முழுப் பெயர்:

2  பிறந்த திகதியும் இடமும்:

3) தற்போதைய  முகவரி மற்றும்  

தொடர்பு இலக்கம் ; மின்னஞ்சல் முகவரி:

4) விண்ணப்பம்  செய்பவரின் அடையாள அட்டை இலக்கம் (பிரதியை இணைக்கவும்)

5) விண்ணப்பம் செய்பவரின் தற்போதைய  தொழில் நிலவரம் : வேலைவாய்ப்பு: பொருளாதார  நிலவரம்  அல்லது  வருமான மூலம்:

6) குடும்ப பற்றிய தகவல்கள் : குடும்ப அங்கத்தவர்களின் பெயர் உறவு முறை: முகவரி

7) வருமான மூலம்:

8) குடும்ப  அங்கத்தவர்களின் பெயர்  மற்றும்  அவர்கள்  குடும்பப் பெயர்கள்,குடியியல் நிலை மற்றும் முகவரி ,தற்போதைய  தொழில் நிலவரம் அல்லது  பொருளாதார நடவடிக்கைகள்:

9) பிரச்சினை தொடர்பான சுருக்கமான விளக்கம் உதாரணம் --- வாழ்விடம் மற்றும்  நில புலங்களின் அழிவு, வாழ்வாதார இழப்பு, பயிர்ச்செய்கை செய்வதற்கான உரித்து, சொத்துக்களின் இழப்பு அல்லது  வேறேதேனும் இழப்பு மற்றும்  இதற்கான நிவாரணத்தினை பெற ஆவணங்கள்  சகிதம் உங்களால்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

10) இதுவரையில்  உரிய அதிகாரிகளாலும் உங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும்  தற்போதைய  நிலை:

11)நிவாரணம் பெறப்பட்டிருப்பின் அவை பற்றிய  சுருக்கம்:

12)ஆதாரமாக  கோவைப்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியல்:

13)கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானதும் சரியானதும் என கையொப்பமிட்டு அத்தாச்சிப்படுத்தப்பட்ட சத்தியக் கூற்று:



கோரிக்கை அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:-

செயலாளர்

கிழக்கு மாகாணத்தினுள் சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு

ஆளுநர்  செயலகம்

கீழ் வீதி

உவர்மலை

திருகோணமலை

தொலைபேசி 0262222102

மின்னஞ்சல் epgovernor@yahoo.com

மேற்சொன்ன  சொன்ன விடயங்கள்  மாதிரி விண்ணப்ப படிவமும் கிழக்கு மாகாண ஆளுநரின் பொது அறிவித்தல்  விபரமுமாகும்.

இவ்விடயம் தொடர்பில்  எனது ஆலோசனைகள்

நாற்பது வருட கால எல்லையில் கிழக்கில்  இடம் பெற்ற சமூக அநீதிகளுக்காக இவ் ஆணைக்குழு அமைக்கப்படுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள்  தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்ய  முடியும்.

அவரவர் சமுகம் சார்ந்து தனி நபர்களும் குழுக்களும் இவ்வாணைக்குழவிற்கு முறையீடுகளை செய்யுங்கள்.

உதாரணங்களாக

# கிழக்கு  மாகாணத்தில் எதிர் நோக்கும்  காணிப் பிரச்சினைகள்

 # காணி தொடர்புடைய பாதிப்புகள்

# ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகள்

# இழக்கப்பட்ட காணி தொடர்பான முறைப்பாடுகள்

# வனத்திணைக்கள மற்றும் தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்புகள்

# புனித பூமி ஆக்கிரமிப்பு தொடர்புடைய முறைப்பாடுகள்

# மேச்சல் தரை தொடர்புடைய பிரச்சினைகள்

# வெளியேற்றப்பட் கிராமங்கள் தொடர்புடைய முறைப்பாடுகள்

# மீள் குடியேற்றம் தொடர்பிலான

# முறைப்பாடுகள் மற்றும்  பொருத்தமான அநீதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள் முறையீடுகளை செய்ய முடியும்.

# தொழில் இழப்புகள், சொத்திழப்புக்கள்,அபிவிருத்தி பாரபட்சம் ,முக்கிய  தேவை மற்றும் அவசியம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் அவசியம் செய்ய  வேண்டிய அபிவிருத்தி  புறக்கணிக்கப்படடு வரல் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்து

# கோறளை மத்திய பிரதேச செயலக எல்லை  நிர்ணய இழுபறி

# கோறளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் இழந்த காணிப் பிரச்சினைகள்

# காத்தான்குடி,ஏறாவூர் மற்றும்  கல்குடா பிரதேசங்களில் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள்

# மீள் குடியேற்றம் பிரச்சினைகள்

கள்ளிச்சை ,பொத்தானை,மருதங்கேணி,மருதங்குளம்,கிரிமிச்சை வாகனேரி இரு நுறு வில்,உன்னிச்சை ,உருகாமம்,சிப்பிமடு போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள்

# ஏறாவூர் பற்றில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

# திருமங்களாவட்டை பயிர்ச் செய்கை பிரச்சினை

# காத்தான்குடி  பிரதேச செயலக எல்லை  முரண்பாடு

# மண்முனைப் பற்று பிரதேசத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

அதாவது திட்டமிட்ட காணி அடகரிப்பு சவக்காலை அமைத்தல்

# முஸ்லிம் காணி உரித்தை பொய் வழக்கிட்டு அகரிக்க முனையும் நிர்வாக கெடுபிடி

# ஒல்லிக்குளம் ,மணமுனை ஹைராத், பாலமுனை,வேடர் குடியிருப்பு காணி அபகரிப்பு வழக்குகள் போன்ற  அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை செய்ய முடியும்.

# மாவட்ட முஸ்லிம் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப காணி பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

# காணியற்றவர்கள் தமக்கு இது வரை பிரதேச செயலகங்கள் காணி வழங்காமை தொடர்பிலும் முறைப்பிடு செய்யலாம்.

# நீண்ட  காலமாக காணிகளை பயன்படுத்தி வருகின்ற போதும் அதற்கான முறைப்படியான ஆவணங்களை வழங்க மறுக்கும் நிர்வாக அநீதிக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யலாம்

இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கெதிராக நீண்ட  காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை தனியாகவும் குழுவாகவும் மேற் கொள்வதன் மூலம் நமது பிரச்சினைகளை வெளிக்கொணர கிடைத்துள்ள இவ் வாய்ப்பை நாம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.

தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும் இச்சந்தர்ப்பம் வழி வகுக்கும்.

மேலதிக  ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் 0777009231 என்ற  எனது கையடக்க  தொலைபேசிக்கு அழைக்கவும்

அனைவரையும் இவ்விடயம் சென்றடைய இப்பதிவை நண்பர்கள் அதிகம் share பகிரவம்.

ஊடக நண்பர்களை மக்களிடம் இவ்விடயத்தை அதிகம் சேர்ப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்

இவ்வண்ணம்

யூஎல்எம்என் முபீன்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்


வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

வாழைச் சேனை வீதியோரத்தில் 58 வயது ஆணின் சடலம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்புவாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில்வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்று (20.01.2021) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமாகமீட்கப்பட்டவர் கறுவாக்கேணியைச் சேர்ந்த வே.தங்கராசாவயது (58) என்ற 4 பிள்ளைகளின் தந்தைஎன அடையாளம் காணப்பட்டுள்ளார்.




குறித்தநபர் நேற்று காலை வீட்டிற்குவந்து மனைவியிடம் கொடுத்து வைத்திருந்திருந்த ஒரு இலட்சம் ரூபாபணத்தில் கடன் செலுத்த வேண்டுமெனகூறி 95,000 ரூபாவை பெற்றுச் சென்றவர்வீடு திரும்பாத நிலையில், வீட்டின் முன் வீதியில் ஓரத்தில்தேங்கி நின்ற வெள்ள நீரில்முகம் குப்பற கிடந்த நிலையில்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்சம்பவம் இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டுதிடீர் மரண விசாரணை அதிகாரிஎம்.எஸ்.எம். நசீர்விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும்சடலம் உடற் கூற்று ஆய்விற்காகமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளதாககூறப்படுகின்றது.

ஜனவரி 22, 2021

சம்மாந்துறை பிதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையைத்தை திறப்பது தொடர்பான கலந்துரையாடல்

 சம்மாந்துறைபிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலைங்களைகற்பித்தல் செயற்பாட்டிற்காக மீளதிறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியசுகாதார விதிமுறைகள் தொடர்பான ஆராயும் விசேட கலந்துரையாடல்சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான .எம்.முஹம்மட்நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது




கோரோனாதொற்று காரணமாக பல மாதங்களாகமூடப்பட்டிருந்த  தனியார்கல்வி நிலையங்களை சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைவாகஎதிர்வரும் 25ஆம் திகதி அரசாங்கம்மீள திறக்குமாறு அறிவித்துள்ளது.

இதன்போதுகல்வி கற்கும் மாணவர்களின் சுகாதார  நடைமுறைகள்சமூக இடைவெளி பேணல், முககவம்அணிதல் தொற்று நீக்கி பாவனை,  நாளாந்தம்வருகை தரும் மாணவர்களுக்கு பதிவேடுபேணுவது, கல்வி நிலையத்தின் அடிப்படைசுகாதார நடைமுறைகளை மேம்படுத்தி தனியார் கல்வி செயற்பாடுகள்முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.    

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் .அச்சு முஹம்மட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிடாக்டர் எஸ்..எம்.கபீர், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் எம்..கே.முஹம்மட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர்எம்..சபூர் தம்பிமேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்  .எல். றாசிக், தனியார்கல்வி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 22, 2021

கல்முனை மாநகரிற்கான பொறியிலாளராக ஏ.எச்.ஏ. ஜௌஸி கடமையேற்றார்.

 கல்முனையைப் பிறப்பிடவாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியிலாளர் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக தனது கடமையை ஏற்றுக்கொண்டார். . இவர் இதற்கு முன்னரும் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக சிறப்பான முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

எல்லோருடமும் நன்றாக பழகி சிறந்த முறையில் கருமம் ஆற்றக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இவருக்கு எமது இணைய தளத்தின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 




ஜனவரி 22, 2021

இலங்கை போக்கு வரத்துச் சபையின் கல்முனை சாலையினால் தூர இடங்களுக்கான சேவை ஆரம்பம்

 நாட்டில்ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து இலங்கைபோக்கு வரத்துச் சபையின் கல்முனை சாலையினால்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ்சேவைகள் வழமைபோன்று எதிர்வரும் 2021.01.24 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகின்றது.



யாழ்ப்பாணம்,

காலை10.00 மணி

பிபிலைஊடாக -

கண்டி  கொழும்பு,

இரவு07.30 மணி

மட்டக்களப்புஊடாக -

கொழும்பு,

இரவு09.30 மணி

ஆசனப்பதிவுகளைஎதிர்வரும் 23.01.2021 திகதி காலை 06.00 மணிமுதல் கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளலாம்.

மேலதிகவிபரங்களுக்கு :

0672229281

முகாமையாளர்,

.போ.சபை,

கல்முனைசாலை.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஜனவரி 21, 2021

மக்கள் வங்கியின் பிரதிநிதியாக சவூதி அரேபியா பயணம்

நிந்தவூரைச் சேர்ந்த மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த தம்பிராசா முஹம்மட் மஜீத் அவர்கள் மக்கள் வங்கியின் சவூதி அரேபியா நாட்டிற்கான வெளிநாட்டு பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 01.02.2021 திகதி பயணமாகின்றார்.


இவர் MBA(UoC-Malaysia), BBA, GDBM(LMQ-UK), HNDBM(LMQ-UK), Diploma in Applied Banking and Finance( IBSL), Diploma in BM(IIBM-India), Diploma in HRM(AIIMS-India) மற்றும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் அங்கத்தவரும்(Associate Member) ஆவார்.

கடந்த 16 வருடங்களாக மக்கள் வங்கியில் கடமையாற்றும் இவர் ஏற்கனவே United Arab Emirates நாட்டுக்கான மக்கள் வங்கியின் வெளிநாட்டு பிரதிநிதியாக கடமையாற்றி Abu Dhabi, Sharjah, Dubai பிராந்தியங்களுக்கு பொறுப்பாக 06 வருடங்கள் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



அவர் மேலும் மக்கள் வங்கியின் வியாபார ஊக்குவிப்பு செயட்பாட்டில் சிறப்பாக செயட்பட்டமைக்காக முழு இலங்கைக்குமான Best Regional Competent Business Promotion Officers Award-2017 யைப் பெற்று சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச கல்விகருத்தரங்கில் பங்குபெறுவதட்கான புலமைப் பரிசிலையயும் வென்றுள்ளார்.

மேலும் எமது பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் முகமாக பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து நடாத்தியுள்ளதுடன், பிரதேச கல்வித் தகைமைகளுடன் மிகவும் நெருங்கி செயற்பட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் மஜீத்.. 

உங்களது பயணம் சிறப்பாக வெற்றி பெற நாம் நிந்தவூர் டுடே சார்பாக வாழ்த்துவதோடு உங்களால் எமது நிந்தவூர் மண் பெருமை அடைகின்றது வாழ்த்துக்கள்

All the best Majeed
ஜனவரி 21, 2021

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொரணா நோயாளிக்கு சத்திரசிகிச்சை நிலையம் தயார் நிலையில்

 கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள தயார் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு    தேவைப்படின்  சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ரஹ்மானின் ஆலோசனைக்கமைய   சத்திர்.சிகிச்சை நிபுணர் வைத்தியர் முஹம்மட் சமீமின் கண்கானிப்பின் கீழ்   இதற்காக ஒரு தனியான மருத்துவப்பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று Appendicitis யினால் பாதிக்கப்பட்டுள்ள  கொவிட்  19 நோயாளி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.


செவ்வாய், 19 ஜனவரி, 2021

ஜனவரி 19, 2021

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்

  இன்று சம்மாந்துறையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாடசாலைகள் திடீரென மூடப்பட்டது.

  இப்பகுதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நிமித்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது, எந்த காரணம் கொண்டும் எந்த வகையான PCR/ Antigen பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்வதுடன், தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு  பெற்றோர்களை சுகாதார அதிகாரி வேண்டிக் கொள்வதுடன் தனது  அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.



ஜனவரி 19, 2021

சம்மாந்துறையில் PCR / Antigen வதந்தியால் பாடசாலைகள் மூடப்பட்டன.

2021.01.19 இன்று பெற்றோர்கள் மத்தியில் கொரணா தொடர்பாக ஏற்பட்ட பீதியின் காரணமாக பாடசாலைகள் திடீரென மூடப்பட்டது. அண்மையில் இப்பகுதியில் கொரணா கொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஜனவரி 17, 2021

மதம் கடந்த மனிதாபிமானம் சமய நல்லிணக்கத்திற்காக

 எனது நீண்ட கால அழைப்பினை ஏற்று இன்று என் சொந்தவூரான நிந்தவூரிற்கு வருகை வந்து எனது இல்லம் தேடி வந்த எனது நண்பரும், பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதியும் இலங்கை திருநாட்டில் சமய சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து சமூகமும் ஒற்றுமையாக நாட்டில் வாழ வேண்டும் என்ற நல்ல உனர்வோடு செயற்படும் பிரபல மதகுரு றாஹுல ஹிமி சாது அவர்களோடு மனமுவந்து கெளரவப்படுத்தி பேசிய போது..

இன்ஷாஹ் அல்லாஹ் மதம் கடந்த மனிதாபிமானம் தொடரும்...

அல்ஹாபிழ்.சிம்லி ஆதம்(நஹ்ழி)

2021.01.17



ஜனவரி 17, 2021

நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் கற்றல் உபகரணம் அன்பளிப்பு

 எமது நிறுவன அதிபரும் நாபீர் பவுண்டேஷன் ஷ்தாபகரும், ஆன உதுமான்கண்டு நாபீர் அவர்களினால் அவரின் பாரியாரின் தந்தையான மர்கூம் மீராலெப்பை,அவர்களின்   நினைவாக  இன்றைய தினம் 17.01.2021 எமது சம்மாந்துறை பகுதியில் உள்ள வறிய தமிழ்/முஸ்லீம் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் உன்னத நோக்கில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்க பட்டது' மேலம் இவ் நிகழ்வினை சிறப்பிக்க நம்பிக்கையாளர் சபை தலைவர் யூ எல் மகூறுப் மௌவி அவர்களும் மர்கூம் மீராலெப்பை பாரியாரும் கலந்து சிறபித்தனர்.....