Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

கல்முனையில் இரண்டாம் கட்ட பட்டதாரி பயிலுனர் நியமனம் வைப்பு...!

 பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் கல்முனையில் வழங்கி வைப்பு...!


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!



இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்
எம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 )  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி


பிப்ரவரி 02, 2021

இளம் வைத்தியர் கொரணாவால் உயிரழப்பு

 இலங்கையில் சுகாதாரத் துறையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கொய்யா காரணமாக மரணமடைந்துள்ளார் Rest in Peace Dr. Gayan Danthanarayana, first medical officer died for .Covid 19 இலங்கையில் முதலாவது இளம் வைத்தியர் .Dr.Gayan Danthanarayana..கொரொனா தொற்று காரணமாக மரணம் அடைந்த து கவலையளிக்கிறது

(Dr.gayan.மனைவியுடன்..)
Dr!




சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

 'சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதியினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை மைதானமும் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். கடந்த  40 வருடமாக எந்தவிதமான அபிவிருத்தியுமில்லாது காணப்பட்ட எமது அல்மர்ஜான் மைதானத்தை, பாடசாலையின் அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க, இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு  அயராது முயற்சி செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கும்  மற்றும் அவரது இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களுக்கும்எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி



 குறிப்பு:  ஏற்கனவே சகோதரர் ARM.றபீக் (தௌபீக்) அவர்களின் முயற்சியின் பலனாக சப்றிகம வேலைத்திட்டதின் கீழ் எமது பாடசாலைக்கு நீர்ப்பாசன மற்றும் மின்சார புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 9 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 30, 2021

மருதமுனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றல்

 பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன்  அவர்களின் பணிப்புரையின் பேரில்

இன்று அதாவது (30-01-2021)9:00 மணி அளவில் மருதமுனை வைத்திய சாலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR அஸ்மி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இன்று கொவிட் 19 தடுப்பூசி போடுகின்ற நிகழ்வு இடம் பெற்றதுஇந்த நிகழ்விலன் போது முதல் தடுப்பு ஊசியினை DR.MOH.Asmee அவர்கள் போட்டுக்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து அனைத்துப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிமார்கள் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்பதற்காகவும் மக்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு உதவியவர்கள்Dr.சுகுணன் (பிராந்திய சுகாதார அதிகாரி)DR.ஆரிப் (பிராந்திய தொற்று நோய்கள் அதிகாரி) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்கள் வைத்திய அதிகாரிdr.அஸ்மீ அவர்கள்.
மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்






வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

 சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளமைக்கு எமது சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஒரு சிறந்த கல்வி நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். மேலும் இவரது சேவைகள் தொடரட்டும்.




சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்


காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின்  முன் மாதிரியான செயல்பாடு...!!!!


காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடமையாற்றும் லொக் டவுன்  பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டன

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்

இவர்களில் காத்தான்குடியில் லொக்டவுன் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு   லொக் டவுன் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரிய  வெளிப்படுத்தியுள்ளனர்

இவ்வாறு 56 ஆசிரியர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் S..H. பிரதெளஸ் அவர்களிடம் குறித்த  ஆசிரியர்கள் இன்று கையளித்தனர்
சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்



இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி M.A. அதிபர் நிஹால்  கலந்து கொண்டார்

நானும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பணி புரிவதில் பெருமையடைகிறேன்.

 தனிமைப் படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை முன்மாதிரியான செயற்பாடாகும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
27.01.2021

திங்கள், 25 ஜனவரி, 2021

ஜனவரி 25, 2021

மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த படித்தவர்கள்

மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த  பேராசிய தம்பதி பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரின் மனைவி பத்மஜா பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களின் மூத்த மகள் அலேக்யா ( வயது 27) MBA படித்துவிட்டு போபாலில் வேலை பார்த்து வந்துள்ளர். இரண்டாவது மகள் சாய் திவ்யா (22) ஏ. ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கள் வீட்டில் மகள்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி புருசோத்தம் அவரின் மனைவி பத்மஜா ஆகியோர்வழிபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டில் பூஜைகள் செய்த பெற்றோர் முதலில் சாய் திவ்யாவை நிர்வாணப்படுத்தி மொட்டையடித்தனர். பிறகு மூத்த மகள் அலெக்கியாவும்  நிர்வாணப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பிறகு, உடற்பயிற்சி செய்யும் சாதனமான டம்பிள்ஸ் மூலம்  இவருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களின் உடல்களுக்கு பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  DSP. ரவி மனோகராச்சாரி கூறுகையில் புருஷேத்தம் நாயுடு வீட்டுக்கு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, வீட்டுக்குள் மகள்கள் இருவரும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து விசாரித்த போது, ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் ' என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். மேலும், போலீஸாரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளனர். பின்னர், உள்ளே புகுந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த  படித்தவர்கள்


இந்த துயர சம்பவம் குறித்து சித்தூர் DSP மனோகராச்சாரி கூறுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். தங்கள் மகள்களையும் நன்கு படிக்க வைத்து வந்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று தெரிகிறது.  அதீத பக்தியின் மூலம் அதிசயம் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.  இதனால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். தங்கள் மகள் மீண்டும் இறக்கவில்லை. ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஜனவரி 25, 2021

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா

 சுகாதார அமைச்சர் பவித்திராவுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் ஹிக்கடுவ ஹோட்டலில் தனிமையில் உள்ளார் என்பதுடன் அவரது கணவரான  காஞ்ஞன ஜயரத்தின என்பவரயும்கொறோனா தொற்றி கொண்டது.

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா


ஜனவரி 25, 2021

முழுமையாக ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!

 நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


தாம் கூறியவாறு ஒளடத பாணியை பருகியிருந்தால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் ஹிரு செய்திச் சேவை தம்மிக பண்டாரவிடம் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியான சிலந்த விஜேபால எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒளடத பாணியை பருகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தொடர்பில் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பி. ஹேவா கமகே தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?

 கோத்தாவின் ஆட்சியில் காதி நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் : முபாற‌க் அப்துல் ம‌ஜீத் 


ஒரு சில‌ காதிமாரின் பிழையான‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ம‌ட்டும் அதிகார‌மாக‌ கொண்ட‌ காதி நீதிம‌ன்ற‌ ந‌டைமுறையை நீக்க‌ முடியாது என‌ உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றி இன்று ஊட‌க‌ங்க‌ளுக்கு கருத்து தெரிவித்த அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌  இருந்த‌ போது ஒரு சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கி பெண்க‌ளின் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ங்க‌ளைத்திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ள் எழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. இத‌ற்கு மு. கா தலைவர் ஹ‌க்கீமும்  ஆத‌ர‌வு கொடுத்த‌தன் கார‌ண‌மாக‌ இக்கோரிக்கைக‌ள் வ‌லுப்பெற‌ ஆர‌ம்பித்த‌ன‌. எந்த‌வொரு க‌ருத்தும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியின் க‌ருத்தாக‌ இருப்பின் அது ம‌க்க‌ளின் க‌ருத்தாக‌வே பார்க்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் மு. கா தலைவர் ஹ‌க்கீமின் முன்னெடுப்புக்க‌ள் ச‌மூக‌த்தின் முன்னெடுப்பாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ முடியாது என்றும் இவ்வாறு திருத்த‌த்துக்கு இட‌மளிப்ப‌து எதிர் கால‌த்தில் காதி நீதிம‌ன்ற‌ங்க‌ளையே ஒழிக்க‌ச்செய்வ‌தில் கொண்டு போய் முடியும் என்ப‌தை உல‌மா க‌ட்சி அன்றே எதிர்த்த‌து. முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்துக்கெதிரான‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளின் கோரிக்கைக‌ள் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளின் பின்ன‌ணியில் சில‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளின் நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத‌ பெண் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளும் இருப்ப‌தை க‌ண்டோம். 

இத‌ன் பின்ன‌ணியில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கொண்டு வ‌ர‌ வேண்டிய‌ திருத்த‌ங்க‌ளை ஆராய‌ க‌ட‌ந்த‌  அர‌சாங்க‌ம் இர‌ண்டு குழுக்க‌ளை நிய‌மித்த‌து. இந்த‌  இர‌ண்டு குழுக்க‌ளின் மாறுப‌ட்ட‌ அறிக்கைக‌ள் நாட்டில் பேசு பொருளான‌ போது இவ்விர‌ண்டு அறிக்கைக‌ளையும் ப‌கிர‌ங்க‌மாக‌ நிராக‌ரித்த‌ நாம் க‌ண்டித்த‌  எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போவ‌து காதி நீதிம‌ன்ற‌  ந‌டைமுறையையே இல்லாம‌ல் செய்வ‌தில் முடியும் என‌ எச்ச‌ரித்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

இறைவ‌ன் உத‌வியால் க‌ட‌ந்த‌ ஆட்சியில் இது எதுவும் ந‌டை பெற‌வில்லை. இப்போது இந்த‌ ஆட்சியில் சில‌ இன‌வாதிக‌ள் காதிநீதிம‌ன்ற‌த்தை ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுப்ப‌தும் க‌ட‌ந்த‌ கால‌ மீதிகளே.

இந்த‌ நாட்டில் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌மே இன்ன‌மும் உள்ள‌து. நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளான‌ கிரிமின‌ல், சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்து ம‌க்க‌ளுக்கும் ஒன்றாக‌வே உள்ள‌து. திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ம‌ட்டும் க‌ண்டிய‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌ம், யாழ்ப்பாண‌ தேச‌ வ‌ழ‌மை ச‌ட்ட‌ம், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என‌ உள்ள‌ன‌. இவை திரும‌ண‌த்துட‌ன் ம‌ட்டுமே தொட‌ர்பு ப‌ட்ட‌தாகும்.  எவ்வாறு பொலிஸின் கீழ் சாம‌ ம‌ண்ட‌ல‌ எனும் ச‌மாதான‌ நீதவான் ம‌ன்ற‌ம் உள்ள‌தோ  அது போன்ற‌ பெரிய‌ அதிகார‌ம் எதுவும‌ற்ற‌ நீதிம‌ன்ற‌மே காதி நீதிம‌ன்ற‌மாகும். அத‌ன் ச‌ட்ட‌ங்க‌ள், ந‌டைமுறைக‌ள் என்ப‌ன‌ பொதுவான‌ நீதி ம‌ன்ற‌ ச‌ட்ட‌த்தின் கீழேயே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌த்தின் கீழேயே உள்ள‌ன‌.

சில‌ காதி நீதிவான்க‌ள் பிழையாக‌, ஊழ‌ல்வாதிக‌ளாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டை சில‌ர் முன் வைக்கின்ற‌ன‌ர். பொதுவாக‌ எல்லா நிர்வாக‌த்திலும் த‌வ‌றான‌வ‌ர்க‌ள், ஊழ‌ல்வாதிக‌ள் உள்ள‌ன‌ர்.  சில‌ நீதிப‌திக‌ள், பொலிசார் மீது கூட‌ ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டுக்க‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ முழு நீதி ம‌ன்ற‌ க‌ட்ட‌மைப்பையும் ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கூற‌ முடியாது. ஊழ‌ல்வாதிக‌ளை, க‌ட்டுப்ப‌டுத்த‌வே பொலிஸ், ஊழ‌ல், ல‌ஞ்ச‌ த‌டுப்பு ச‌ட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றில் முறையிட‌ முடியும். க‌ட‌ந்த‌ ஆட்சி முழுக்க‌ முழுக்க‌ ஊழ‌ல்வாதிக‌ளாலும், மோச‌டிக்கார‌ர்க‌ளாலும் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் ம‌க்க‌ளுக்கு நீதி கிடைக்காத‌தால் இவை பாரிய‌ பிர‌ச்சினைக‌ளாக‌ தெரிந்த‌ன‌.
காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?



ஆனால் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ த‌லைமையில் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் ஊழ‌ல்வாதிக‌ளும், ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌வ‌ர்களும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தையும், திற‌மைசாலிக‌ளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை காண்கிறோம். இத்த‌கைய‌ சிற‌ப்பான‌ ஆட்சியில் காதிமார் நேர்மைக்கு மாற்ற‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியாது என்ப‌தால் காதி நீதி ம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் என‌ நாம் ந‌ம்புகிறோம். அந்த‌ வ‌கையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திலோ, காதி நீதிம‌ன்ற‌ ந‌டவ‌டிக்கைக‌ளிலோ எத்த‌கைய‌ திருத்த‌த்தையோ, மாற்றுத‌லையோ கொண்டு வ‌ர‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நூருல் ஹுதா உமர்.
ஜனவரி 24, 2021

பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு

 (றியாத் ஏ.மஜீத்)


சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.

கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.

இவர் சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் ஜப்பார் தம்பதியினரின் புதல்வியாவார். கணவர் எம்.ஐ.எம்.லரீப் பொது கணக்கு பரிசோதகராவார்.



சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.நஜிமுதீன் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

பிளாஸ்டிக் , பொலித்தீன் பொருட்கள் மீதான தடைக்கான தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டபொலித்தீன்மற்றும்பிளாஸ்டிக்உற்பத்தியில்ஈடுபடுபவர்களுக்குநிவாரணம்மற்றும்இதரநடவடிக்கைகளுக்கானகாலஅவகாசம்வழங்கவேண்டும்எனஅமைச்சரவைமட்டத்தில்தீர்மானம்எடுக்கப்பட்டது. இதற்கமையஇரண்டுமாதகாலஅவகாசம்வழங்கப்பட்டுள்ளது.

 


அதன் பிரகாரம்வாசனைத்திரவியங்கள்மற்றும்நீராகாரபொருட்கள்அடைக்கப்பட்டசிறுபொலித்தீன்பக்கட், காற்றுநிரப்பப்பட்டபிளாஸ்டிக்உற்பத்தியிலானவிளையாட்டுபொருட்கள், மைக்ரோன்20 இற்குகுறைவானலஞ்சீட்ஆகியவைஉற்பத்திசெய்யவும், பகிர்ந்தளிக்கவும்விதிக்கப்பட்டுள்ளதடைஏப்ரல்மாதம்முதல்வாரத்தில்இருந்துஅமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனவரி 23, 2021

ரஞ்சன் சிறைசென்றது ஒரு அரசியல் ரீதியான பலிவாங்களா? -உதயன் கம்பல

 

'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

 


கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 பதில்: -செய்வதற்க எதுவும் இல்லாததால் எதிர்க் கட்சியினர் இந்த விடயத்தை வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர். எதிர்க் கட்சியினர் கூறுவதைப் போல் ஜனாதிபதி அவரது பேச்சில் ஹரின் பெர்னாண்டோவை அச்சுறுத்தவில்லை. செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் அடிப்படையற்ற இந்த விடயத்தை வைத்து இல்லாத விடயங்களை உருவாக்க எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

 

கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?

 பதில்: - ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் ஒரு அரசியல் பழி வாங்கல் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுமாக இருந்தால், ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விசாரித்த நீதிபதிகள் அப்போதைய அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பேரில்அவர்களது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.

 கே: -இலங்கைக்கு கொவிட்19 தடுப்பு மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய மற்றும் சீன பிரதமர்களுக்கு கடிதமெழுதியுள்ளார். இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பான தற்போதைய நிலை என்ன?

 

பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.

 

ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.

 

கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -பலம் மிக்க எதிர்க் கட்சியானது பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் இருக்க வேண்டும். பலம் மிக்க எதிர்க் கட்சி பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது அது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். 1977 இல் எதிர்க் கட்சியில் 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இது ஒன்றும் புது விடயமல்ல. எவ்வாறெனினும் அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக் காட்ட பலம் மிக்க எதிர்க் கட்சி எமக்குத் தேவைப்படுகின்றது.

 

கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் சுகாதார அதிகாரிகளையோ நிர்வாக அதிகாரிகளையோ இராணுவம் மாற்றவில்லை. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்கள் உள்ளன. தனிமைப்படுத்தல் அல்லது நிவாரண பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உள்ளூர் தலைவர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

  

இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

 

எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.

 

எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

 கே: மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் மாகாண சபை முறைமையை தொடர்வது நியாயபூர்வமானதா? அது பொதுமக்கள் பணத்தை விரயமாக்கும் ஒரு செயல் என்று சிலர் கூறுகிறார்களே?

 

பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.

 கே: அரசாங்கம் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக மகாசங்கத்தின் ஒரு பகுதியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை உள்ளதா?

 

பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

 கே: நாட்டில் நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கதவுகளை திறந்து விடுவது சரியென்று நினைக்கிறீர்களா?

 

பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?

 கே: வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.

 

உதித்த குமாரசிங்க

தமிழில்: என். ராமலிங்கம்

நன்றி  - தினகரன்

ஜனவரி 23, 2021

சுகாதார அமைச்சருக்கு கொரணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சர் பவித்திர வண்ணியராச்சிக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிழலையில் சுகாதார அமைச்சருக்கும் தற்போது தொற்றுயுள்ளாராக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்கு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு கொரணா தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவரும் கேகாலை தம்மிக்கையின் பாணியினை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர்பவித்ராவன்னியராச்சிக்குகொரோனாதொற்றுஏற்பட்டுள்ளதாகசுகாதாரஅமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில்அமைச்சர்பவித்ராவன்னியாரச்சிஇலங்கையில்கொவிட்-19 தொற்றுக்குள்ளான5ஆவதுபாராளுமன்றஉறுப்பினராவார்.

 

கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டசுகாதாரஅமைச்சர்பவித்ராவன்னியராச்சிதற்போதுஹிக்கடுவவில்உள்ளசிகிச்சைநிலையமொன்றில்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.

 

இதேவேளை பவித்ராவன்னியாரச்சிநேற்றையதினம்(22) ஸ்ரீஜயவர்தனபுரமருத்துவமனையில்நடைபெற்றநிகழ்வொன்றில்பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில்அவருடன்சுகாதாரசேவைகள்பணிப்பாளர்நாயகம்அசேலகுணவர்தனஉள்ளிட்டசுகாதாரத்துறையின்உயர்அதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 


அத்துடன், (21.01.2021) நெலும்மாவத்தையில்ஶ்ரீலங்காபொதுஜனபெரமுனகட்சிஅலுவலகத்தில்இடம்பெற்றநிகழ்வொன்றிலும்அமைச்சர்பவித்ராபங்கேற்றிருந்தார்.

 

அந்த வகையில், இதற்குமுன்னர்இராஜாங்கஅமைச்சர்தயாசிறிஜயசேகர, ரஊப்ஹக்கீம்எம்.பி., அமைச்சர்வாசுதேவநாணயக்கார, இராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தஆகியஐந்துபாராளுமன்றஉறுப்பினர்களுக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டிருப்பதுகண்டறியப்பட்டிருந்தது. இதில்தயாசிறிஜயசேகரகுணமடைந்துதற்போதுவீட்டில்சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்என்பதும்குறிப்பிடத்தக்கது.

 

அமைச்சர் பவித்ராவன்னியாரச்சிநிகழ்வொன்றின்போது, கேகாலையைச்சேர்ந்தஆயுர்வேதவைத்தியர்எனதம்மைஅடையாளப்படுத்திவரும்தம்மிகபண்டாரதயாரித்த, கொரோனவைரஸுக்குஎதிரானநோயெதிர்ப்புசக்தியைகொண்டபாணியைஅருந்தியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

இப்பாணியை அருந்தியஇராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தவும்கொரோனாதொற்றுக்குள்ளானமைகுறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னர்பாராளுமன்றத்தில்மேற்கொண்டPCR சோதனையில்அங்குகடமையாற்றும்ஒன்பதுபேருக்குகொரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டிருந்தது.

ஜனவரி 23, 2021

உலகளாவிய ACCA பரீட்சையில் பர்ஹான் அகமட் முதலிடம்

கொலியோயாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பல்கலைக்கழக மாணவருவமான பர்ஹான் அகமட் என்பவர் சர்வதேச அளவில் பிரபலமான ACCA பரீட்சையில் தனது திறமையைக்காட்டி முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.  இவரின் எதிர்காலம் சிறக்க எமது இணைத்தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

 


ACCA சர்வதேச தகைமை பரீட்சையில் உலக அளவில் முதலிடம் பெற்றார் Farhan Ahamed.

Farhan Ahmed, An undergraduate of University of Colombo from Galiyoya has become the world prize winner (World No. 01) for the Subject of FM in ACCA skills level examination happened in December 2020

Our heartiest congratulations to you Farhan Ahmed!

ஜனவரி 23, 2021

இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஓமான் விமானம்..!

நீர் பீச்சியடித்து வரவேற்பு...!

கொரோனா பரவல் காரணமாக  மூடப்பட்ட விமான நிலையம்  10 மாதங்களுக்கு பின்  இன்று  (21 ) மீள சகல பயணிகளுக்குமாக  கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம்திறக்கப்பட்டுள்ளன. 
 இதன்படி  இலங்கையர்களை ஏற்றிய முதலாவதுவிமானம் Oman Air WY – 371    ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானம்கடடுநாயக்க விமான நிலையத்தில் 7.30am இற்கு  தரையிறங்கியது.  விமானத்திற்கு நீர் பீச்சியடித்து Water salutes  வரவேற்பளிக்கப்பட்டது.
விமானத்தில் வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் வணிக விமானம்மூலம் வருகை தந்தனர். இதுவரை காலமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் விசேடமாகஅழைத்துவரப்பட்டனர். இனி குறைந்த கட்டணங்களில் வரமுடியும்.
சுற்றுலா விசா, குடியுரிமை விசா மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை விசாக்களை Tourist Visa, Resident Visa,  Investors  ,  Dual Citizens  பயன்படுத்தி  இலங்கைக்கு வரலாம்.
குடிவரவு மற்றும்குடியகல்வுத் திணைக்களத்தால்  ஒன்லைனில் விசா வழங்கப்படும்.
மேலும் சுமார்15 விமானங்கள் தினம் இலங்கைக்கு வரவுள்ளன.