Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Information லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Information லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!

 இலங்கை வாழ் மக்கள் கவனத்திற்கு... 


X/25 524376 என்ற தொடர் இலக்கங்களை கொண்ட 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன .!
ஒரே தாள்களை பிரதி செய்து புழக்கத்தில் விடப்பட்டடுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது . 

எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் ..! 

இந்த தகவலை உடனடியாக பகிர்ந்து (share) மற்றவர்களுக்கு உதவிடுங்கள் !
போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!


வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!

 நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...


இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா மேலும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்இ அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர்இ குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!



கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29, 2021

விமானப் படையினரால் கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

 கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!


கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!  கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.  அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.  இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது. 

    

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 

கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம். 
மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர்  தெரிவித்தார். 

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அண்மையில் ஒரு வேலையின் நிமித்தம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்ற போது எனது வகுப்பறைத் தோழன் நண்பன் ஐயூப்கானைச் சந்திக்கக் கிடைத்ததில் பேரானந்தம்!

உதவி மாவட்டப் பதிவாளர் காரியாலயத்தில் தனது கடமையிலிருந்த நண்பன் ஐயூப்கான் என்னைக் கண்டதும் ஓடிவந்து, ' எங்கே மச்சான் இந்தப் பக்கம்? தனக்கே உரிய தனிப்பாணியில் என் நெஞ்சில் தனது வலது முன்னங் கையால் தாக்கி சுகம் விசாரித்தார்.
அவ்வாறு தனது தனிப்பாணியில் சுகம் விசாரிப்பதுதான் நண்பர் ஐயூப்கானின் முதற்படி! அது ஐயூப்கான்.தெரிந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும்! சில நண்பர்கள் ஐயூப்கானைக் கண்டதும் இவ்வடிகளுக்குப் பயந்து ஓடி ஒழிப்பதுமுண்டு! 

இத்தனைக்கும் நண்பர் ஐயூப்கான் பொல்லாதவரும் அல்ல! சிறந்த பண்பாளன்! எவரை எந்த இடத்தில் கண்டாலும் மரியாதையோடு உரிய உறவு முறைகளை, முறைப்படி சொல்லி அழைப்பதில் முதன்மையானவர். சிறந்த ஒழுக்கப் பண்புகள் நிறைந்த, கல்விமான்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்து! இந்த முத்துக்கு வித்திட்டவர் விலேஜ் ஹெட்மேன் மர்ஹூம் ஆதம்பாவா அவர்கள். 

நண்பர்களான தாஹீர்கான், ஐயூப்கான் போன்றவர்களோடு தோட்டத்துப் பள்ளியில் படிக்கின்ற காலம் மிக இனிமையானது. அல்-அஷ்றக் காலம் அதை விட இனிமையும் பசுமையும் நிறைந்தது. அக்காலத்தில் நண்பர்களின் குடும்பத்தில்தான் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்தனர். அக்காலத்தில் ரீ சேட், றெணிங் றவுசரை இவர்கள் குடும்பத்தில்தான் அதிகமாகக் காண முடியும்! நாங்களும் அவைகளில் நனைந்ததுண்டு! சாதிக் காக்கா, உடையான் காக்கா, பசீல் காக்கா, றாஜா கான் தம்பி, இரண்டு ராத்தாமார் என்று எல்லோருமே அன்பானவர்கள்! முறக்க முடியாத குடும்பம்!
பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.


இலங்கையில் எந்த இடத்தில் கண்டாலும் அன்பு, ஆதரவுக்குப் பஞ்சமில்லை! பதறிப்போய் விழுந்து விழுந்து ஆதரிக்கும் பண்பாளர்கள்! பலமொழிகளைப் பயன்படுத்தும் சொல்லாற்றல் கொண்டவர்கள்! எந்த உயர்பதவியைக் கொடுத்தாலும் அதனை அலங்கரிக்கச் செய்யும் ஆற்றலுள்ளவர்கள்! 

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோரில் நிந்தவூர் மண் ஈன்ற ஒரே ஒரு அதிகாரக் கதிரைக்குரியவர் நண்பர் ஐயூப்கான்! இவருக்குப் பிரதேச செயலாளர் பதவி வழங்கினாலும் துணிவோடும், பணிவோடும் செய்து முடிப்பதில் வல்லவர். நண்பர் ஐயூப்கான் இன்று போல் என்றும் வாழ, எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்.
ஜனவரி 24, 2021

எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.

 சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வயின்னாயிலஹி ராஜியுன் 

வித்தகர் விருது பெற்று விடைபெற்றார்.

அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.



யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திற்திற்றேன்.

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

மிக முக்கிய அறிவித்தலின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தல்

 Deen Fairoos Journalist

இப் பகிரங்க அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கான முறைப்பாடுகளை முன்வைக்கும் கால எல்லை எதிர்வரும் 31/01/2021 உடன் முடிவடைய இருந்தது.

கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்த போது இவ்விடயம் தொடர்பிலும் பேசினோம்.

கொரோனா காரணமாக அதிக மக்கள் விண்ணப்பிக்கவில்லை.

விண்ணப்ப முடிவு காலத்தை மேலும்  நீடிக்குமாறு கோரினோம்.

எதிர் வரும் பெப்ரவரி 2021 இறுதி வரை அதாவது மேலும்  ஒரு மாதம்  காலத்தை நீடிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

விடயம் இதுதான்

ஆளுநரின் அறிவித்தலை அப்படியே தருகின்றேன்.

பொது அறிவித்தல்

கடந்த நான்கு தசாப்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஏதாகியினும் ஒரு பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற  செயற்பாடுகள் அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான தனி நபர்கள் அல்லது குழுக்களின் கவனத்தை  ஈர்க்கும்  பொது அறிவித்தல்

மேற்சொன்னதே விடயத்தின் தலைப்பு

இனி விபரம் வருமாறு:--

கிழக்கு மாகாண மக்கள்  மத்தியில்  நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வினை

உறுதிப்படுத்தும் நோக்குடன் அதனோடு இணைந்த இடைநேர்விளைவான விடயங்களை  எடுத்துரைக்கும் வகையிலும் கிழக்கு மாகாணத்தினுள்  ஏற்பட்டுள்ள அனைத்து  வகையான சமூக அநீதிகள் பற்றிய  முறைப்பாடுகள்,கோரிக்கைகள் மற்றும்  மேன்முறையீடுகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று அவற்றின் ஆழத்தினை விளங்கி,ஆய்வு செய்து பொருத்தமான  பரிந்துரைகளை வழங்கவென கிழக்கு  மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள் நிபுணர் குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த ஏதேனும்  சமூக அநீதிகளுக்காக நீதியை எதிர்பார்க்கும்  எந்த  ஒரு தனி நபரும் அல்லது குழுவானவர்களும் அவர்கள் எந்த  வகையில்  பாதிக்கப்பட்டார்கள் அல்லது  தொடர்ச்சியாக பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்னும் மனக்குமுறல்களை உறுதிப்படுத்தப்பட்ட  அதிகாரபூர்வமான ஆவணங்களுடன் (மூல ஆவணங்கள் அன்றி பிரதிகளுடன்) ஏதேனும் பெயரை உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது  அவர்களின் கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் துணை ஆதாரங்கள் சகிதம்

"கிழக்கு மாகாணத்தினுள் சமூக  அநீதிகளை ஆய்வு  செய்வதற்கான நிபுணர் குழு "

 என்று தலைப்பிட்டு கீழ் குறிப்பிடும் முகவரிக்கு  பதிவுத்தபாலில்

அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மாதிரி விண்ணப்ப படிவம்

1) முழுப் பெயர்:

2  பிறந்த திகதியும் இடமும்:

3) தற்போதைய  முகவரி மற்றும்  

தொடர்பு இலக்கம் ; மின்னஞ்சல் முகவரி:

4) விண்ணப்பம்  செய்பவரின் அடையாள அட்டை இலக்கம் (பிரதியை இணைக்கவும்)

5) விண்ணப்பம் செய்பவரின் தற்போதைய  தொழில் நிலவரம் : வேலைவாய்ப்பு: பொருளாதார  நிலவரம்  அல்லது  வருமான மூலம்:

6) குடும்ப பற்றிய தகவல்கள் : குடும்ப அங்கத்தவர்களின் பெயர் உறவு முறை: முகவரி

7) வருமான மூலம்:

8) குடும்ப  அங்கத்தவர்களின் பெயர்  மற்றும்  அவர்கள்  குடும்பப் பெயர்கள்,குடியியல் நிலை மற்றும் முகவரி ,தற்போதைய  தொழில் நிலவரம் அல்லது  பொருளாதார நடவடிக்கைகள்:

9) பிரச்சினை தொடர்பான சுருக்கமான விளக்கம் உதாரணம் --- வாழ்விடம் மற்றும்  நில புலங்களின் அழிவு, வாழ்வாதார இழப்பு, பயிர்ச்செய்கை செய்வதற்கான உரித்து, சொத்துக்களின் இழப்பு அல்லது  வேறேதேனும் இழப்பு மற்றும்  இதற்கான நிவாரணத்தினை பெற ஆவணங்கள்  சகிதம் உங்களால்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

10) இதுவரையில்  உரிய அதிகாரிகளாலும் உங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும்  தற்போதைய  நிலை:

11)நிவாரணம் பெறப்பட்டிருப்பின் அவை பற்றிய  சுருக்கம்:

12)ஆதாரமாக  கோவைப்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியல்:

13)கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானதும் சரியானதும் என கையொப்பமிட்டு அத்தாச்சிப்படுத்தப்பட்ட சத்தியக் கூற்று:



கோரிக்கை அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:-

செயலாளர்

கிழக்கு மாகாணத்தினுள் சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு

ஆளுநர்  செயலகம்

கீழ் வீதி

உவர்மலை

திருகோணமலை

தொலைபேசி 0262222102

மின்னஞ்சல் epgovernor@yahoo.com

மேற்சொன்ன  சொன்ன விடயங்கள்  மாதிரி விண்ணப்ப படிவமும் கிழக்கு மாகாண ஆளுநரின் பொது அறிவித்தல்  விபரமுமாகும்.

இவ்விடயம் தொடர்பில்  எனது ஆலோசனைகள்

நாற்பது வருட கால எல்லையில் கிழக்கில்  இடம் பெற்ற சமூக அநீதிகளுக்காக இவ் ஆணைக்குழு அமைக்கப்படுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள்  தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்ய  முடியும்.

அவரவர் சமுகம் சார்ந்து தனி நபர்களும் குழுக்களும் இவ்வாணைக்குழவிற்கு முறையீடுகளை செய்யுங்கள்.

உதாரணங்களாக

# கிழக்கு  மாகாணத்தில் எதிர் நோக்கும்  காணிப் பிரச்சினைகள்

 # காணி தொடர்புடைய பாதிப்புகள்

# ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகள்

# இழக்கப்பட்ட காணி தொடர்பான முறைப்பாடுகள்

# வனத்திணைக்கள மற்றும் தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்புகள்

# புனித பூமி ஆக்கிரமிப்பு தொடர்புடைய முறைப்பாடுகள்

# மேச்சல் தரை தொடர்புடைய பிரச்சினைகள்

# வெளியேற்றப்பட் கிராமங்கள் தொடர்புடைய முறைப்பாடுகள்

# மீள் குடியேற்றம் தொடர்பிலான

# முறைப்பாடுகள் மற்றும்  பொருத்தமான அநீதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள் முறையீடுகளை செய்ய முடியும்.

# தொழில் இழப்புகள், சொத்திழப்புக்கள்,அபிவிருத்தி பாரபட்சம் ,முக்கிய  தேவை மற்றும் அவசியம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் அவசியம் செய்ய  வேண்டிய அபிவிருத்தி  புறக்கணிக்கப்படடு வரல் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்து

# கோறளை மத்திய பிரதேச செயலக எல்லை  நிர்ணய இழுபறி

# கோறளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் இழந்த காணிப் பிரச்சினைகள்

# காத்தான்குடி,ஏறாவூர் மற்றும்  கல்குடா பிரதேசங்களில் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள்

# மீள் குடியேற்றம் பிரச்சினைகள்

கள்ளிச்சை ,பொத்தானை,மருதங்கேணி,மருதங்குளம்,கிரிமிச்சை வாகனேரி இரு நுறு வில்,உன்னிச்சை ,உருகாமம்,சிப்பிமடு போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள்

# ஏறாவூர் பற்றில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

# திருமங்களாவட்டை பயிர்ச் செய்கை பிரச்சினை

# காத்தான்குடி  பிரதேச செயலக எல்லை  முரண்பாடு

# மண்முனைப் பற்று பிரதேசத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

அதாவது திட்டமிட்ட காணி அடகரிப்பு சவக்காலை அமைத்தல்

# முஸ்லிம் காணி உரித்தை பொய் வழக்கிட்டு அகரிக்க முனையும் நிர்வாக கெடுபிடி

# ஒல்லிக்குளம் ,மணமுனை ஹைராத், பாலமுனை,வேடர் குடியிருப்பு காணி அபகரிப்பு வழக்குகள் போன்ற  அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை செய்ய முடியும்.

# மாவட்ட முஸ்லிம் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப காணி பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

# காணியற்றவர்கள் தமக்கு இது வரை பிரதேச செயலகங்கள் காணி வழங்காமை தொடர்பிலும் முறைப்பிடு செய்யலாம்.

# நீண்ட  காலமாக காணிகளை பயன்படுத்தி வருகின்ற போதும் அதற்கான முறைப்படியான ஆவணங்களை வழங்க மறுக்கும் நிர்வாக அநீதிக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யலாம்

இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கெதிராக நீண்ட  காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை தனியாகவும் குழுவாகவும் மேற் கொள்வதன் மூலம் நமது பிரச்சினைகளை வெளிக்கொணர கிடைத்துள்ள இவ் வாய்ப்பை நாம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.

தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும் இச்சந்தர்ப்பம் வழி வகுக்கும்.

மேலதிக  ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் 0777009231 என்ற  எனது கையடக்க  தொலைபேசிக்கு அழைக்கவும்

அனைவரையும் இவ்விடயம் சென்றடைய இப்பதிவை நண்பர்கள் அதிகம் share பகிரவம்.

ஊடக நண்பர்களை மக்களிடம் இவ்விடயத்தை அதிகம் சேர்ப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்

இவ்வண்ணம்

யூஎல்எம்என் முபீன்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்


ஜனவரி 23, 2021

குருனகால் ஹிஸ்புல்லா மத்திய கல்லூரி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

 மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால் கைகளை கழுவும் போது அதைத் தொடமால் கழுவுவதற்கு புதிய தொழில் நுட்ப ரீதியான சிறிய ரக தன்னியக்க இயந்திரமொன்றை கண்டு பிடித்துள்ளார் குருநாகல் பாடசாலை மாணவன்.

கொவிட் கொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால் கைகளை கழுவும் போது அதைத் தொடமால் கழுவதற்கு தொழில் நுட்ப ரீதியான தன்னியக்க இயந்திரமொன்றை கண்டு பிடித்துள்ளார் குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் 11 ஆண்டு தரத்தில் கல்வி பயிலும் மாணவன் எம். . எம். அம்ஹர்.

இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப கொவிட் 19 கொரோனா தொற்றுக் காரணமாக முகக் கவசம் அணிந்து ஒரு மீட்டர் சமூகஇடைவெளியைக் கருத்திற் கொண்டு சுகாதார நடை முறைகளைப் பேணி வகுப்பறையில் பாடங்களை கற்கும் மாணவர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்களிப்பாக அமையும் என்ற நோக்கில்; இந்த கருவியை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்.

இவர் சிறு வயதில் இருந்து பல கண்டு பிடிப்புக்களைச் செய்து வரும் இவர் அசாதாரண நிலைமைகளை எதிர் கொண்டு பாதுகாப்பான மற்றும் கல்விச் சூழலை சுகாதார நடைமுறையுடன் வாழப் பழகுவதற்கான உகந்த சிறிய ரக தொழில் நுட்க தன்னியக்க இயந்திரம் கண்டு பிடித்த மாணவன் அம்ஹரை பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது.

அவர் இதற்காக ட்ரான்ஸ்சிஸ்டர், . ஆர். ஸ்கேனர், மோட்டர் முதலிய மின்சார இயந்திர மூலப் பொருட்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இதை மேலும் விரிவிடுத்தி தொழில் நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளதாக அம்ஹர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் . எச். . முனாவ் கருத்து தெரிவிக்கையில் ஆரம்பத்தில் இருந்து இப்படியான பல கண்டு பிடிப்புக்களை அவர் செய்துள்ளார். இவரது முயற்சிகளுக்கு எமது பாடசாலை சமூகம் தொடர்ந்து ஆதரவையும் பாராட்டுக்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இம்மாணவின் முயற்சிகளுக்கு பாட ஆசிரியை எம். ஆர். சிபானியா ராசிக் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பரியவையாகும்.



வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

வீட்டுத் தோட்டப் பயிர்கள் மேற்கொள்ளும் காலங்கள் எவை

 வீட்டுத் தோட்டப் பயிர்கள் மேற்கொள்ளும் போது அதிக விளைச்சல் பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான கால நிலைகளை தெரிவு செய்தல் விரும்பத்தக்கதாகும். அதன் மூலம் பொருத்தமான பயிர்களை நடுவதன் ஊடாக அதிக பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். அந்த அடிப்பபடையில் எந்தக் காலப்பகுதியில் எதனை பயிர் செய்ய வேண்டும் என்பதை இங்கு உங்களுக்கு தருகின்றோம். 



எந்தெந்தமாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

ஜனவரி: (மார்கழி - தை)

1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.

பிப்ரவரி: (தை - மாசி)

1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.

மார்ச்: (மாசி - பங்குனி)

1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல்: (பங்குனி - சித்திரை)

1)கொத்தவரை, 2) வெண்டை.

மே: (சித்திரை - வைகாசி)

1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி - ஆனி)

1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

ஜூலை: (ஆனி -ஆடி)

1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)

1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)

1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)

1)கத்தரி, 2)முள்ளங்கி.

நவம்பர்: (ஐப்பசி - கார்த்திகை)

1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

டிசம்பர்: (கார்த்திகை - மார்கழி)

1)கத்தரி, 2)தக்காளி.

 

ஜனவரி 22, 2021

சம்மாந்துறை பிதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையைத்தை திறப்பது தொடர்பான கலந்துரையாடல்

 சம்மாந்துறைபிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலைங்களைகற்பித்தல் செயற்பாட்டிற்காக மீளதிறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியசுகாதார விதிமுறைகள் தொடர்பான ஆராயும் விசேட கலந்துரையாடல்சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான .எம்.முஹம்மட்நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது




கோரோனாதொற்று காரணமாக பல மாதங்களாகமூடப்பட்டிருந்த  தனியார்கல்வி நிலையங்களை சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைவாகஎதிர்வரும் 25ஆம் திகதி அரசாங்கம்மீள திறக்குமாறு அறிவித்துள்ளது.

இதன்போதுகல்வி கற்கும் மாணவர்களின் சுகாதார  நடைமுறைகள்சமூக இடைவெளி பேணல், முககவம்அணிதல் தொற்று நீக்கி பாவனை,  நாளாந்தம்வருகை தரும் மாணவர்களுக்கு பதிவேடுபேணுவது, கல்வி நிலையத்தின் அடிப்படைசுகாதார நடைமுறைகளை மேம்படுத்தி தனியார் கல்வி செயற்பாடுகள்முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.    

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் .அச்சு முஹம்மட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிடாக்டர் எஸ்..எம்.கபீர், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் எம்..கே.முஹம்மட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர்எம்..சபூர் தம்பிமேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்  .எல். றாசிக், தனியார்கல்வி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 22, 2021

இலங்கை போக்கு வரத்துச் சபையின் கல்முனை சாலையினால் தூர இடங்களுக்கான சேவை ஆரம்பம்

 நாட்டில்ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து இலங்கைபோக்கு வரத்துச் சபையின் கல்முனை சாலையினால்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ்சேவைகள் வழமைபோன்று எதிர்வரும் 2021.01.24 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகின்றது.



யாழ்ப்பாணம்,

காலை10.00 மணி

பிபிலைஊடாக -

கண்டி  கொழும்பு,

இரவு07.30 மணி

மட்டக்களப்புஊடாக -

கொழும்பு,

இரவு09.30 மணி

ஆசனப்பதிவுகளைஎதிர்வரும் 23.01.2021 திகதி காலை 06.00 மணிமுதல் கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளலாம்.

மேலதிகவிபரங்களுக்கு :

0672229281

முகாமையாளர்,

.போ.சபை,

கல்முனைசாலை.