Deen Fairoos Journalist
இப் பகிரங்க அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்திற்கான முறைப்பாடுகளை
முன்வைக்கும் கால எல்லை எதிர்வரும் 31/01/2021 உடன் முடிவடைய இருந்தது.
கடந்த திங்கட்கிழமை ஆளுநரை
சந்தித்த போது இவ்விடயம் தொடர்பிலும் பேசினோம்.
கொரோனா காரணமாக அதிக மக்கள்
விண்ணப்பிக்கவில்லை.
விண்ணப்ப முடிவு காலத்தை மேலும் நீடிக்குமாறு கோரினோம்.
எதிர் வரும் பெப்ரவரி
2021 இறுதி வரை அதாவது மேலும் ஒரு மாதம் காலத்தை நீடிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
விடயம் இதுதான்
ஆளுநரின் அறிவித்தலை அப்படியே
தருகின்றேன்.
பொது அறிவித்தல்
கடந்த நான்கு தசாப்த காலத்தில்
நாட்டில் ஏற்பட்ட ஏதாகியினும் ஒரு பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற செயற்பாடுகள் அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளால்
பாதிப்புக்குள்ளான தனி நபர்கள் அல்லது குழுக்களின் கவனத்தை ஈர்க்கும்
பொது அறிவித்தல்
மேற்சொன்னதே விடயத்தின் தலைப்பு
இனி விபரம் வருமாறு:--
கிழக்கு மாகாண மக்கள் மத்தியில்
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வினை
உறுதிப்படுத்தும் நோக்குடன்
அதனோடு இணைந்த இடைநேர்விளைவான விடயங்களை எடுத்துரைக்கும்
வகையிலும் கிழக்கு மாகாணத்தினுள் ஏற்பட்டுள்ள
அனைத்து வகையான சமூக அநீதிகள் பற்றிய முறைப்பாடுகள்,கோரிக்கைகள் மற்றும் மேன்முறையீடுகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று அவற்றின்
ஆழத்தினை விளங்கி,ஆய்வு செய்து பொருத்தமான
பரிந்துரைகளை வழங்கவென கிழக்கு மாகாண
கெளரவ ஆளுநர் அவர்கள் நிபுணர் குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த ஏதேனும் சமூக அநீதிகளுக்காக நீதியை எதிர்பார்க்கும் எந்த ஒரு
தனி நபரும் அல்லது குழுவானவர்களும் அவர்கள் எந்த
வகையில் பாதிக்கப்பட்டார்கள் அல்லது தொடர்ச்சியாக பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்
என்னும் மனக்குமுறல்களை உறுதிப்படுத்தப்பட்ட
அதிகாரபூர்வமான ஆவணங்களுடன் (மூல ஆவணங்கள் அன்றி பிரதிகளுடன்) ஏதேனும் பெயரை
உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது அவர்களின்
கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் துணை ஆதாரங்கள் சகிதம்
"கிழக்கு மாகாணத்தினுள்
சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு "
என்று தலைப்பிட்டு கீழ் குறிப்பிடும் முகவரிக்கு பதிவுத்தபாலில்
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றீர்கள்.
மாதிரி விண்ணப்ப படிவம்
1) முழுப் பெயர்:
2 பிறந்த திகதியும் இடமும்:
3) தற்போதைய முகவரி மற்றும்
தொடர்பு இலக்கம் ; மின்னஞ்சல்
முகவரி:
4) விண்ணப்பம் செய்பவரின் அடையாள அட்டை இலக்கம் (பிரதியை இணைக்கவும்)
5) விண்ணப்பம் செய்பவரின்
தற்போதைய தொழில் நிலவரம் : வேலைவாய்ப்பு: பொருளாதார நிலவரம்
அல்லது வருமான மூலம்:
6) குடும்ப பற்றிய தகவல்கள்
: குடும்ப அங்கத்தவர்களின் பெயர் உறவு முறை: முகவரி
7) வருமான மூலம்:
8) குடும்ப அங்கத்தவர்களின் பெயர் மற்றும்
அவர்கள் குடும்பப் பெயர்கள்,குடியியல்
நிலை மற்றும் முகவரி ,தற்போதைய தொழில் நிலவரம்
அல்லது பொருளாதார நடவடிக்கைகள்:
9) பிரச்சினை தொடர்பான சுருக்கமான
விளக்கம் உதாரணம் --- வாழ்விடம் மற்றும் நில
புலங்களின் அழிவு, வாழ்வாதார இழப்பு, பயிர்ச்செய்கை செய்வதற்கான உரித்து, சொத்துக்களின்
இழப்பு அல்லது வேறேதேனும் இழப்பு மற்றும் இதற்கான நிவாரணத்தினை பெற ஆவணங்கள் சகிதம் உங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
10) இதுவரையில் உரிய அதிகாரிகளாலும் உங்களாலும் மேற்கொள்ளப்பட்டு
வந்துள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும்
தற்போதைய நிலை:
11)நிவாரணம் பெறப்பட்டிருப்பின்
அவை பற்றிய சுருக்கம்:
12)ஆதாரமாக கோவைப்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியல்:
13)கோரப்பட்டுள்ள விபரங்கள்
யாவும் உண்மையானதும் சரியானதும் என கையொப்பமிட்டு அத்தாச்சிப்படுத்தப்பட்ட சத்தியக்
கூற்று:
கோரிக்கை அனுப்பி வைக்கப்பட
வேண்டிய முகவரி:-
செயலாளர்
கிழக்கு மாகாணத்தினுள் சமூக
அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு
ஆளுநர் செயலகம்
கீழ் வீதி
உவர்மலை
திருகோணமலை
தொலைபேசி 0262222102
மின்னஞ்சல்
epgovernor@yahoo.com
மேற்சொன்ன சொன்ன விடயங்கள் மாதிரி விண்ணப்ப படிவமும் கிழக்கு மாகாண ஆளுநரின்
பொது அறிவித்தல் விபரமுமாகும்.
இவ்விடயம் தொடர்பில் எனது ஆலோசனைகள்
நாற்பது வருட கால எல்லையில்
கிழக்கில் இடம் பெற்ற சமூக அநீதிகளுக்காக இவ்
ஆணைக்குழு அமைக்கப்படுள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை
செய்ய முடியும்.
அவரவர் சமுகம் சார்ந்து தனி
நபர்களும் குழுக்களும் இவ்வாணைக்குழவிற்கு முறையீடுகளை செய்யுங்கள்.
உதாரணங்களாக
# கிழக்கு மாகாணத்தில் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள்
# காணி தொடர்புடைய பாதிப்புகள்
# ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்
தொடர்பிலான முறைப்பாடுகள்
# இழக்கப்பட்ட காணி தொடர்பான
முறைப்பாடுகள்
# வனத்திணைக்கள மற்றும் தொல்பொருள்
திணைக்கள ஆக்கிரமிப்புகள்
# புனித பூமி ஆக்கிரமிப்பு
தொடர்புடைய முறைப்பாடுகள்
# மேச்சல் தரை தொடர்புடைய
பிரச்சினைகள்
# வெளியேற்றப்பட் கிராமங்கள்
தொடர்புடைய முறைப்பாடுகள்
# மீள் குடியேற்றம் தொடர்பிலான
# முறைப்பாடுகள் மற்றும் பொருத்தமான அநீதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள்
முறையீடுகளை செய்ய முடியும்.
# தொழில் இழப்புகள், சொத்திழப்புக்கள்,அபிவிருத்தி
பாரபட்சம் ,முக்கிய தேவை மற்றும் அவசியம் செய்யப்பட
வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் அவசியம் செய்ய
வேண்டிய அபிவிருத்தி புறக்கணிக்கப்படடு
வரல் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும்.
மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்து
# கோறளை மத்திய பிரதேச செயலக
எல்லை நிர்ணய இழுபறி
# கோறளை மேற்கு ஓட்டமாவடி
பிரதேசம் இழந்த காணிப் பிரச்சினைகள்
# காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் கல்குடா பிரதேசங்களில் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள்
# மீள் குடியேற்றம் பிரச்சினைகள்
கள்ளிச்சை ,பொத்தானை,மருதங்கேணி,மருதங்குளம்,கிரிமிச்சை
வாகனேரி இரு நுறு வில்,உன்னிச்சை ,உருகாமம்,சிப்பிமடு போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகள்
மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள்
# ஏறாவூர் பற்றில் நிலவும்
காணிப் பிரச்சினைகள்
# திருமங்களாவட்டை பயிர்ச்
செய்கை பிரச்சினை
# காத்தான்குடி பிரதேச செயலக எல்லை முரண்பாடு
# மண்முனைப் பற்று பிரதேசத்தில்
நிலவும் காணிப் பிரச்சினைகள்
அதாவது திட்டமிட்ட காணி அடகரிப்பு
சவக்காலை அமைத்தல்
# முஸ்லிம் காணி உரித்தை பொய்
வழக்கிட்டு அகரிக்க முனையும் நிர்வாக கெடுபிடி
# ஒல்லிக்குளம் ,மணமுனை ஹைராத்,
பாலமுனை,வேடர் குடியிருப்பு காணி அபகரிப்பு வழக்குகள் போன்ற அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்ய முடியும்.
# மாவட்ட முஸ்லிம் சனத்தொகை
பரம்பலுக்கு ஏற்ப காணி பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்
# காணியற்றவர்கள் தமக்கு இது
வரை பிரதேச செயலகங்கள் காணி வழங்காமை தொடர்பிலும் முறைப்பிடு செய்யலாம்.
# நீண்ட காலமாக காணிகளை பயன்படுத்தி வருகின்ற போதும் அதற்கான
முறைப்படியான ஆவணங்களை வழங்க மறுக்கும் நிர்வாக அநீதிக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யலாம்
இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி
நமக்கெதிராக நீண்ட காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை தனியாகவும்
குழுவாகவும் மேற் கொள்வதன் மூலம் நமது பிரச்சினைகளை வெளிக்கொணர கிடைத்துள்ள இவ் வாய்ப்பை
நாம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.
தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும்
இச்சந்தர்ப்பம் வழி வகுக்கும்.
மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் 0777009231 என்ற எனது கையடக்க
தொலைபேசிக்கு அழைக்கவும்
அனைவரையும் இவ்விடயம் சென்றடைய
இப்பதிவை நண்பர்கள் அதிகம் share பகிரவம்.
ஊடக நண்பர்களை மக்களிடம் இவ்விடயத்தை
அதிகம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்
இவ்வண்ணம்
யூஎல்எம்என் முபீன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக