Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Religion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Religion லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!

 கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு  இன்று (26) பிற்பகல் நிறைவு பெற்றது.

கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்   மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (14) வியாழன் கொடியேற்றம் ஆரம்பமாகிகடந்த 12 தினங்களாக  இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!



இதன் போது மெளலித் ஷரீப் பாராயணம்,  மற்றும் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன்  குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக   விடுபட வேண்டி  விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
  
இதன் போது உலமாக்கள்,  அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,சுகாதார பிரிவினர்  பள்ளிவாசல் நிர்வாகிகள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா  தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?

 கோத்தாவின் ஆட்சியில் காதி நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் : முபாற‌க் அப்துல் ம‌ஜீத் 


ஒரு சில‌ காதிமாரின் பிழையான‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ம‌ட்டும் அதிகார‌மாக‌ கொண்ட‌ காதி நீதிம‌ன்ற‌ ந‌டைமுறையை நீக்க‌ முடியாது என‌ உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றி இன்று ஊட‌க‌ங்க‌ளுக்கு கருத்து தெரிவித்த அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌  இருந்த‌ போது ஒரு சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கி பெண்க‌ளின் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ங்க‌ளைத்திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ள் எழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. இத‌ற்கு மு. கா தலைவர் ஹ‌க்கீமும்  ஆத‌ர‌வு கொடுத்த‌தன் கார‌ண‌மாக‌ இக்கோரிக்கைக‌ள் வ‌லுப்பெற‌ ஆர‌ம்பித்த‌ன‌. எந்த‌வொரு க‌ருத்தும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியின் க‌ருத்தாக‌ இருப்பின் அது ம‌க்க‌ளின் க‌ருத்தாக‌வே பார்க்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் மு. கா தலைவர் ஹ‌க்கீமின் முன்னெடுப்புக்க‌ள் ச‌மூக‌த்தின் முன்னெடுப்பாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ முடியாது என்றும் இவ்வாறு திருத்த‌த்துக்கு இட‌மளிப்ப‌து எதிர் கால‌த்தில் காதி நீதிம‌ன்ற‌ங்க‌ளையே ஒழிக்க‌ச்செய்வ‌தில் கொண்டு போய் முடியும் என்ப‌தை உல‌மா க‌ட்சி அன்றே எதிர்த்த‌து. முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்துக்கெதிரான‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளின் கோரிக்கைக‌ள் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளின் பின்ன‌ணியில் சில‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளின் நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத‌ பெண் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளும் இருப்ப‌தை க‌ண்டோம். 

இத‌ன் பின்ன‌ணியில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கொண்டு வ‌ர‌ வேண்டிய‌ திருத்த‌ங்க‌ளை ஆராய‌ க‌ட‌ந்த‌  அர‌சாங்க‌ம் இர‌ண்டு குழுக்க‌ளை நிய‌மித்த‌து. இந்த‌  இர‌ண்டு குழுக்க‌ளின் மாறுப‌ட்ட‌ அறிக்கைக‌ள் நாட்டில் பேசு பொருளான‌ போது இவ்விர‌ண்டு அறிக்கைக‌ளையும் ப‌கிர‌ங்க‌மாக‌ நிராக‌ரித்த‌ நாம் க‌ண்டித்த‌  எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போவ‌து காதி நீதிம‌ன்ற‌  ந‌டைமுறையையே இல்லாம‌ல் செய்வ‌தில் முடியும் என‌ எச்ச‌ரித்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

இறைவ‌ன் உத‌வியால் க‌ட‌ந்த‌ ஆட்சியில் இது எதுவும் ந‌டை பெற‌வில்லை. இப்போது இந்த‌ ஆட்சியில் சில‌ இன‌வாதிக‌ள் காதிநீதிம‌ன்ற‌த்தை ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுப்ப‌தும் க‌ட‌ந்த‌ கால‌ மீதிகளே.

இந்த‌ நாட்டில் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌மே இன்ன‌மும் உள்ள‌து. நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளான‌ கிரிமின‌ல், சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்து ம‌க்க‌ளுக்கும் ஒன்றாக‌வே உள்ள‌து. திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ம‌ட்டும் க‌ண்டிய‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌ம், யாழ்ப்பாண‌ தேச‌ வ‌ழ‌மை ச‌ட்ட‌ம், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என‌ உள்ள‌ன‌. இவை திரும‌ண‌த்துட‌ன் ம‌ட்டுமே தொட‌ர்பு ப‌ட்ட‌தாகும்.  எவ்வாறு பொலிஸின் கீழ் சாம‌ ம‌ண்ட‌ல‌ எனும் ச‌மாதான‌ நீதவான் ம‌ன்ற‌ம் உள்ள‌தோ  அது போன்ற‌ பெரிய‌ அதிகார‌ம் எதுவும‌ற்ற‌ நீதிம‌ன்ற‌மே காதி நீதிம‌ன்ற‌மாகும். அத‌ன் ச‌ட்ட‌ங்க‌ள், ந‌டைமுறைக‌ள் என்ப‌ன‌ பொதுவான‌ நீதி ம‌ன்ற‌ ச‌ட்ட‌த்தின் கீழேயே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌த்தின் கீழேயே உள்ள‌ன‌.

சில‌ காதி நீதிவான்க‌ள் பிழையாக‌, ஊழ‌ல்வாதிக‌ளாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டை சில‌ர் முன் வைக்கின்ற‌ன‌ர். பொதுவாக‌ எல்லா நிர்வாக‌த்திலும் த‌வ‌றான‌வ‌ர்க‌ள், ஊழ‌ல்வாதிக‌ள் உள்ள‌ன‌ர்.  சில‌ நீதிப‌திக‌ள், பொலிசார் மீது கூட‌ ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டுக்க‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ முழு நீதி ம‌ன்ற‌ க‌ட்ட‌மைப்பையும் ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கூற‌ முடியாது. ஊழ‌ல்வாதிக‌ளை, க‌ட்டுப்ப‌டுத்த‌வே பொலிஸ், ஊழ‌ல், ல‌ஞ்ச‌ த‌டுப்பு ச‌ட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றில் முறையிட‌ முடியும். க‌ட‌ந்த‌ ஆட்சி முழுக்க‌ முழுக்க‌ ஊழ‌ல்வாதிக‌ளாலும், மோச‌டிக்கார‌ர்க‌ளாலும் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் ம‌க்க‌ளுக்கு நீதி கிடைக்காத‌தால் இவை பாரிய‌ பிர‌ச்சினைக‌ளாக‌ தெரிந்த‌ன‌.
காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?



ஆனால் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ த‌லைமையில் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் ஊழ‌ல்வாதிக‌ளும், ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌வ‌ர்களும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தையும், திற‌மைசாலிக‌ளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை காண்கிறோம். இத்த‌கைய‌ சிற‌ப்பான‌ ஆட்சியில் காதிமார் நேர்மைக்கு மாற்ற‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியாது என்ப‌தால் காதி நீதி ம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் என‌ நாம் ந‌ம்புகிறோம். அந்த‌ வ‌கையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திலோ, காதி நீதிம‌ன்ற‌ ந‌டவ‌டிக்கைக‌ளிலோ எத்த‌கைய‌ திருத்த‌த்தையோ, மாற்றுத‌லையோ கொண்டு வ‌ர‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நூருல் ஹுதா உமர்.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஜனவரி 21, 2021

மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதும் அவசியமானது அமெரிக்க தூதுவர் அலைனா கருத்து


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைக்கிணங்க அடக்கம் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸினால் மரணித்தத அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதென குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின்படி மத நம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை 1955 இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல், பின்பற்றுதல், வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்று சர்வதேச சவால்களை உருவாக்கினாலும் இதற்காக இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 13 ஜனவரி, 2021

ஜனவரி 13, 2021

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்கு உரித்தாகட்டும்

 சூரியன் பகவானுக்கு தெரிவிக்கப்படும் நன்றியினை மையமாக வைத்து தமிழர்கள் தங்களுடைய தைப்பொங்கல் திருநாளை மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இன்று உலகில் திருநாளை கொண்டாடும் சகல தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.



தை பிறந்தால் வழி பிறக்கட்டும் இந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக தமிழர்களின் வாழ்வில் சிறந்த பல நல்ல வழி பிறக்கட்டும்

புதன், 6 ஜனவரி, 2021

ஜனவரி 06, 2021

நபி ( ஸல் ) அவர்கள் விரும்பி சாப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!



1. கருஞ்சீரகம்

2. பார்லி

3. பேரித்தம் பழம்

4. தேன்

5. பால்

6. அத்தி பழம்

7. தர்பூசணி பழம்

8. காளான்

9. வினிகர்

10. திராட்சை

11. ஆலிவ் எண்ணெயை

12. மாதுளை பழம்

13.சுரைக்காய்


இதில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு..!

ஒரு வரியில் விளக்கம்

1. கருஞ்சீரகம் - அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்

2. பார்லி  - காய்ச்சலுக்கு நிவாரணம்

3. பேரித்தம் பழம் - இரும்பு சத்து அதிகம் உள்ளது

4. தேன் - வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம்

5. பால் - மூளைக்கும் , கண் பார்வைக்கும்

6. அத்தி பழம் - மூல நோய்க்கு மருந்து

7. தர்பூசணி - ஆண்மை பெருக்கி

8. காளான் - கண் பார்வைக்கும் , பக்க வாதத்திற்கும் சிறந்தது

9. வினிகர் - அஜீரண கோளாறுகளை நீக்கும்

10. திராட்சை - இதன் விதை புற்றுநோய் க்கு சிறந்த மருந்து

11. ஆலிவ் - சருமத்திற்கும் , கூந்தலுக்கும்

12. மாதுளை - இதய பாதுகாப்பிற்கு...

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

கட்டாரில் உள்ளவர்கள் உம்ரா, ஹஜ் செய்யும் வாய்ப்புக்கள்

 கட்டாரிலுள்ளபலர் தரை மார்க்கமாக உம்ராசெய்ய இலகுவாக இருந்ததோடு சவுதியின்பல உற்பத்திகள் கட்டாரில் பி்ரபலமாக இருந்த நிலையில் 2017 இல்உறவுகளி்ல் விரிசல் ஏற்பட்டு தரை,வான்,கடல் மார்க்கதொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டது

அண்டியநாடுகள் பலவற்றின் தடையோடு தன் நாட்டுபொருளாதாரம்,உணவு தேவை,உற்பத்திதேவை ,என பல துறைகளில்தன்னிறைவு கண்டுள்ளது கட்டார் தமது நாட்டின் திறமையானதலைமையின் முயற்சியின் பிரதிபலிப்புடனும் அந்தோடு தமது உறவை மீண்டும்புதுப்பிற்கிறது சவுதியுடன் பலரின் உள்ளத்தில் உம்ரா சென்று வரஉதிப்பு உண்டாக்கியது இந்த செய்தி



கத்தார்சவூதி அரேபிய வான், தரைமற்றும் கடல் மார்க்கமான வழிகள்இன்று இரவு திறக்கப்பட்டுள்ளன.

மேலும்கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம்பின் ஹமத் அல்-தானி05/01/2021 செவ்வாய்க்கிழமை(நாளை) சவூதி அரேபியாவில் நடைபெறும்41 வது GCC மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.