Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

மருதமுனையைச் சேர்ந்த முஸம்மில் அதிபர் 34 வருட சேவையிலிருந்து ஓய்வு

 -றாசிக்நபாயிஸ்-

மருதமுனைஅல்-மனார் மத்திய கல்லூரியின்பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவிற்குபொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில்(B.Com, PGDE, SLPS-1) அவர்கள்தனது 34 வருட கால கல்விச்சேவையிலிருந்து (24) ஓய்வு பெறுகின்றார்.

இப்றாலெப்பைமுகையதீன், முஹம்மது இஸ்மாயில் சாபிறா உம்மா தம்பதிகளுக்குஇரண்டாவது மகனாகப் பிறந்த அவர்தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்கல்வி கற்று 19வது வயதில்பேராதனைப்  பல்கலைக்கழகத்திற்குதெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.

ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மதுஅபூபக்கரின் மகளான சித்தி ஜெஸிறாவைகரம் பிடித்து ஒரு ஆண் மற்றும்இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்ததந்தையாகி அவர்களையும் கல்விப் புலத்தில் சிறந்துவிளங்க அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.

1987ஆம்ஆண்டு ஆசிரியர் சேவையில்  இணைந்துகொண்டு  கல்முனைமஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில்தனது முதல் நியமனத்தை பெற்று07 வருட காலம் சிறந்த ஆசிரியர்பணியை ஆற்றினார்.

1993ஆம்ஆண்டு இடமாற்றம் பெற்று பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன் பின்னர் 1994ஆம்ஆண்டு நற்பிட்டிமுனை,

அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்பெற்று அங்கு இரண்டு வருடங்கள்கடமையாற்றிய நிலையில் 1996ஆம் ஆண்டு மருதமுனைஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்பெற்று வந்து கல்விப்பணி ஆற்றியநிலையில் 1998ஆம் ஆண்டு கல்முனைஇஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

அங்கிருந்து2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு தனது ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்றியநிலையில் 2005ஆம் ஆண்டு இப்பாடசாலையில்உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.

2009ஆம்ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்இணைந்து தனது ஆசிரியர் பணியினைசிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளை கண்டஅதிபர் கா.பொ..சாதாரண பிரிவுக்கான பகுதித்தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது தனதுபணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.

03/10/2012 ஆம்ஆண்டு தரம்-11 அதிபர் சேவையில்நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப்பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாககடமையாற்றிய நிலையில் 01/01/2020 ஆம் ஆண்டு தரம்-1க்கு அதிபர் சேவையில்தகுதி பெற்றார்.

இவரின்பொறுப்பு அதிபர் சேவைக்காலப் பகுதியில்பல சவால்களை எதிர்கொண்டு

அல்-மனார் மத்திய கல்லூரியின்கல்வி வளர்ச்சி, பௌதீகவள அபிவிருத்தி மற்றும்  ஏனையசெயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்து வந்துள்ளதுடன் குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின்கல்வி வளர்ச்சியிலும் பெளதீகவள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைவழங்கியமையினால் பாடசாலையின் அபிவிருத்தி சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார்.

குறிப்பாகதனது அயராத முயற்சியின் ஊடாககல்விப் பணிமனை, பெற்றோர், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம் பெண்கள் மற்றும்ஆரம்ப பிரிவில் கனிஷ்ட பேன்ட் வாத்தியக்குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம்மற்றும் கணணிக் கூடம்

என்பவற்றினையும்உருவாக்கியதுடன் மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளைமேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும்ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்.

இதன் மூலம் ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரீட்சையில் 2016ஆம்ஆண்டு 35 மாணவர்கள் ஒரே தடவையில் சித்திபெற வழிகாட்டியதுடன் 2019ஆம் ஆண்டு கா.பொ..சாதாரணபரீட்சையில் பெண் மாணவிகள் சிறப்பானசித்திகளைப் பெறுவதற்கு துணை நின்றது

மாத்திரமல்லாமல்தமிழ்த் தின, ஆங்கிலப் போட்டிகளில்மாணவிகளை பிரதேச, மாவட்ட, மாகாணமட்டங்களில் வெற்றி பெறவைத்து தேசியமட்டத்துக்கு அனுப்பி முதலிடம் பெறவைத்து பலரை தங்கப் பதக்கம்பெற வழி சமைத்தார்.

இப்படியாகஅல்-மனார் மத்திய கல்லூரியின்சகல வளர்ச்சிக்கும் தனது முழுமையான பங்களிப்பினைதனது சேவைக் காலத்திற்குள் வழங்கிஎல்லோர் மனங்களிலும் முத்தாக இருந்து வருகிறார்.

சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

சிறந்த எழுத்தாளர் கல்முனை பறக்கத்துள்ளாஹ்வின் இரு நூல்கள் தெரிவு!




(எம் .என்.எம்.அப்ராஸ் )

கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ்  2020ம் வருடம் கொள்வனவு செய்வதற்காக தெரிவில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் அவர்கள் எழுதிய "கல்முனை_உள்ளூராட்சி_நிருவாகம்"
(250 வருட வரலாற்றுப் பதிவுகள் ) மற்றும் "இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதித்_தேர்தல்கள் "ஆகிய இரண்டு நூல்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


இதே வேளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் இலக்கியம் மற்றும் ஆய்வு துறையில் இவர் இளங்கலைஞர் விருது  வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவர் தேசிய நாளிதழான நவமணி பத்திரிகையில் ஒவ்வொரு  கிராமங்களின்ள வரலாற்று தொகுப்பு என்ற தொடர் கட்டுரையை கடந்த நாட்களில் எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

20000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ஒரு உலகம்

 மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.....

( இதை படிக்க 5'து நிமிடம் ஒதுக்குங்கள் )



நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்,

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!

இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !

தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .நன்றி