Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

விசித்திரமான கடற்கரையை நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக  20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்


முற்றுமுழுதாக வனத்தால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சி தரும்  இந்த கடற்கரை   பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது

இந்த கடற்கைரைய சூழவுள்ள வனப்பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான இலங்கையில் அருகி வரும் குரங்கினம் என அண்மைய ஆய்வில் அறியப்பட்டுள்ள ஊதா நிற முகம் கொண்ட லங்கூர் என்ற குரங்கு இனங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன
இது பொதுவாக கூச்ச சுபாவம் உள்ள குரங்கினங்கள் ஆகும்
விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)


விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)








ஆகவே இந்த குரங்குகளிடமிருந்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்

இது போன்ற மேலும் பல தகவல்களை பெற எமது பக்கத்தை  Like செய்யுங்கள்

 உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்
பிப்ரவரி 03, 2021

கல்முனையில் இரண்டாம் கட்ட பட்டதாரி பயிலுனர் நியமனம் வைப்பு...!

 பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் கல்முனையில் வழங்கி வைப்பு...!


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!



இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்
எம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)
பிப்ரவரி 03, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது


பிப்ரவரி 03, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது 

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்பில் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.


வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. 


போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 )  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி


பிப்ரவரி 02, 2021

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


(யு.எம்.இஸ்ஹாக்,சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அண்மையில் எழுதி வெளியிட்ட "நிதி முகாமைத்துவம் " நிதிப்பிரமாணங்களும் ,நிதி நடைமுறைகளும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. 
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் கல்வியியலாளர்களை கெளரவப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறுமதி வாய்ந்த இந்த நூலை வெளியிட்டு வைத்ததை முன்னிட்டு கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்வை அவரது வீடு தேடி சென்று வாழ்த்தி நினைவு சின்னம் , நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையிலான அமைப்பின் குழுவினர் நேற்று இரவு கணக்காளரின் வீட்டுக்கு சென்று இந்த பாராட்டு நிகழ்வை நடாத்தினர்.
நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


பாராட்டைப் பெற்ற கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில் நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன் பல கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றேன் ஆனால் என்னை வீடு தேடிவந்து பாராட்டிய இந்த நிகழ்வு என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது . இதனை என் வாழ்வில் ஒரு போதும் மறந்து விட முடியாது. இதற்காக நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பினருக்கு உள்ளார்த்தமான நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அதிபர்களான வீ.எம்.ஸம்ஸம் ,ஏ.எம்.சாலிதீன் மௌலவி ,திருமதி ஏ.முனாஸிர்,ஆசிரியர் ஏ.எல்.அஷ்ரப் , அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .