இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய
இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை
my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.
இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை
ஆட்சியை பிடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்...!!!
நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!
'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.
கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.
பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.
ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.
கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.
எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.
எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.
பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?
பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.
உதித்த குமாரசிங்க
தமிழில்: என். ராமலிங்கம்
நன்றி - தினகரன்
அம்பாறை உகன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவர்கள் கோட்டாபாய பேசிய பேச்சில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஹரீன் பெர்ணாட்டோ எம். பி அவர்கள் தனக்கு மேலதிக பாதுகாப்பு தேவையென கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்விடயம் தொடர்பாக அவர் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்படி விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தினால் அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியம் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருவதுடன் ரவுப் ஹக்கிமுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுது்தலுக்கு உட்படுத்த சி.சி..ரிவி காட்சிகளை பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →