Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

செவ்வாய், 26 ஜனவரி, 2021

இனவாதம் பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்

 ஆட்சியை பிடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்...!!!


இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன்...!!!

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்த வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி,  சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். ஏற்கனவே  ஜனாதிபதி கோத்தபய, பிரதமர் மகிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனவாதம்  பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்



ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால்  இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாசா எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்துதொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(Anzir)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக