Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது


வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

பெண்கள் மறுமணம் செய்வது பாவமா? - படித்ததில் பிடித்தது

மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல 

மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல ...

காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..
நாங்கள் காலமும் செய்ய 
இங்கு ஆயிரம் உண்டு 

பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை 
உள்ளன்பு உயர் தியாகம் 
இவை இன்றி வேறில்லை 

மகர் கொடுத்து பெண்ணெடுத்து மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து 
மீண்டு வந்தால் பாவமில்லை 

#நாங்கள் 

கட்டிலினை அலங்கரிக்கும் 
பொருளுமில்லை ..
நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை
 
சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு  சாகும் வரை
 உரிமை இழக்க நாங்கள் ஒன்றும்
அடிமை இல்லை 

உள்ளத்தின் உணர்ச்சிகளை 
புரியாமல் வெறும் உடல் 
தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு 

பண்பாடு கலாச்சாரம் என்று 
சொல்லிக்கொண்டு நாங்கள் ..படும் பாடை 
சரி செய்யா சமுதாயமே....!

வந்து விட்டு உண்டு விட்டு 
சென்று விடுவீர். 
எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர்? 

காமத்தில் மட்டும் தான் 
ஆண்களின் பங்கு.
 நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு. 



மெட்டி போட்டு 
மேளம் தட்டி 
மேடை மீது தாலி கட்டி 
கையைப் பிடித்தவன் கயவன் என்றால் 
நானா பொறுப்பு??? 

முதல் வாழ்க்கை முறிதல் 
பாவமுமில்லை ....
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை

மனம் பார்த்து மணம் 
கொள்ளவன் ஆண்களின் கூட்டம். மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்.

திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
 மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல 

நாங்கள் வாழ்வில் 
தடுக்கித் தான் போனோம் 
தவறி ஒன்றும் போகவில்லை 

தோற்றாவிடியிலும் பரவாயில்லை 
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

என்றும் எல்லோர் மனதிலும் இருக்கும் வரக பொல அபுல் ஹசன் ஹாஜியார்




இலங்கையின் இரண்டாவது பிரதமர் டட்லி சேனாநாயக்க கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு மீரிகம திரும்பிய போது அவரது தந்தை DSசேனாநாயக்க தனது மகனை வரகாபொல அபுல் ஹஸன் ஹாஜியாரிடம் அனுப்பிவைத்து " எனது மகனுக்கு நல்ல ஒரு ஆசானாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருப்பீர்கள்" என்ற நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பதாகக் கூறியிருந்தார்".

அபுல்ஹஸன் ஹாஜியார்.

1.வரகாபொல பொலிஸ்நிலையத்திற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியவர்.

2.கள்எலிய முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்களில ஒருவர்.

3. வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் காணியை வழங்கியவர்

4.தாருல் ஹஸனாத் 8 ஏக்கர் காணியை அன்பளிப்பாக வழங்கியவர் 

5.வரகாபொல டவ்ன் ஜும்ஆ பள்ளிவாசலின் காணிகளை வழங்கியவர்.

6. வேவல்தெனிய பள்ளிவாசல் காணியை வழங்கியவர்.

7. ஹஸன்புர வீடமைப்புத்திட்டம்

8. வரகாபொல மற்றும் கணிதபுர பள்ளிவாசல்களுக்காக தனது சொந்தக் கடைகளை வக்ப் செய்தவர்.

 9. சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு கூடதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

10. மக்காவில் உள்ள  பைதுல் பாஸியைச் சேர்ந்த இமாம் டாக்டர் இப்றாஹீம் அல்பாஸி அவர்களின் ஆன்மீக வழிகாட்டலோடு இலங்கையர்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

வல்லநாயன் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாகவும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

கல்முனை மாநகரிற்கான பொறியிலாளராக ஏ.எச்.ஏ. ஜௌஸி கடமையேற்றார்.

 கல்முனையைப் பிறப்பிடவாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியிலாளர் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக தனது கடமையை ஏற்றுக்கொண்டார். . இவர் இதற்கு முன்னரும் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக சிறப்பான முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

எல்லோருடமும் நன்றாக பழகி சிறந்த முறையில் கருமம் ஆற்றக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இவருக்கு எமது இணைய தளத்தின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 




ஜனவரி 22, 2021

மருதமுனையைச் சேர்ந்த முஸம்மில் அதிபர் 34 வருட சேவையிலிருந்து ஓய்வு

 -றாசிக்நபாயிஸ்-

மருதமுனைஅல்-மனார் மத்திய கல்லூரியின்பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவிற்குபொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில்(B.Com, PGDE, SLPS-1) அவர்கள்தனது 34 வருட கால கல்விச்சேவையிலிருந்து (24) ஓய்வு பெறுகின்றார்.

இப்றாலெப்பைமுகையதீன், முஹம்மது இஸ்மாயில் சாபிறா உம்மா தம்பதிகளுக்குஇரண்டாவது மகனாகப் பிறந்த அவர்தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்கல்வி கற்று 19வது வயதில்பேராதனைப்  பல்கலைக்கழகத்திற்குதெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.

ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மதுஅபூபக்கரின் மகளான சித்தி ஜெஸிறாவைகரம் பிடித்து ஒரு ஆண் மற்றும்இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்ததந்தையாகி அவர்களையும் கல்விப் புலத்தில் சிறந்துவிளங்க அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.

1987ஆம்ஆண்டு ஆசிரியர் சேவையில்  இணைந்துகொண்டு  கல்முனைமஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில்தனது முதல் நியமனத்தை பெற்று07 வருட காலம் சிறந்த ஆசிரியர்பணியை ஆற்றினார்.

1993ஆம்ஆண்டு இடமாற்றம் பெற்று பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன் பின்னர் 1994ஆம்ஆண்டு நற்பிட்டிமுனை,

அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்பெற்று அங்கு இரண்டு வருடங்கள்கடமையாற்றிய நிலையில் 1996ஆம் ஆண்டு மருதமுனைஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்பெற்று வந்து கல்விப்பணி ஆற்றியநிலையில் 1998ஆம் ஆண்டு கல்முனைஇஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

அங்கிருந்து2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு தனது ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்றியநிலையில் 2005ஆம் ஆண்டு இப்பாடசாலையில்உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.

2009ஆம்ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்இணைந்து தனது ஆசிரியர் பணியினைசிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளை கண்டஅதிபர் கா.பொ..சாதாரண பிரிவுக்கான பகுதித்தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது தனதுபணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.

03/10/2012 ஆம்ஆண்டு தரம்-11 அதிபர் சேவையில்நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப்பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாககடமையாற்றிய நிலையில் 01/01/2020 ஆம் ஆண்டு தரம்-1க்கு அதிபர் சேவையில்தகுதி பெற்றார்.

இவரின்பொறுப்பு அதிபர் சேவைக்காலப் பகுதியில்பல சவால்களை எதிர்கொண்டு

அல்-மனார் மத்திய கல்லூரியின்கல்வி வளர்ச்சி, பௌதீகவள அபிவிருத்தி மற்றும்  ஏனையசெயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்து வந்துள்ளதுடன் குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின்கல்வி வளர்ச்சியிலும் பெளதீகவள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைவழங்கியமையினால் பாடசாலையின் அபிவிருத்தி சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார்.

குறிப்பாகதனது அயராத முயற்சியின் ஊடாககல்விப் பணிமனை, பெற்றோர், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம் பெண்கள் மற்றும்ஆரம்ப பிரிவில் கனிஷ்ட பேன்ட் வாத்தியக்குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம்மற்றும் கணணிக் கூடம்

என்பவற்றினையும்உருவாக்கியதுடன் மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளைமேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும்ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்.

இதன் மூலம் ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரீட்சையில் 2016ஆம்ஆண்டு 35 மாணவர்கள் ஒரே தடவையில் சித்திபெற வழிகாட்டியதுடன் 2019ஆம் ஆண்டு கா.பொ..சாதாரணபரீட்சையில் பெண் மாணவிகள் சிறப்பானசித்திகளைப் பெறுவதற்கு துணை நின்றது

மாத்திரமல்லாமல்தமிழ்த் தின, ஆங்கிலப் போட்டிகளில்மாணவிகளை பிரதேச, மாவட்ட, மாகாணமட்டங்களில் வெற்றி பெறவைத்து தேசியமட்டத்துக்கு அனுப்பி முதலிடம் பெறவைத்து பலரை தங்கப் பதக்கம்பெற வழி சமைத்தார்.

இப்படியாகஅல்-மனார் மத்திய கல்லூரியின்சகல வளர்ச்சிக்கும் தனது முழுமையான பங்களிப்பினைதனது சேவைக் காலத்திற்குள் வழங்கிஎல்லோர் மனங்களிலும் முத்தாக இருந்து வருகிறார்.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஜனவரி 21, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகி சடலங்களில் வைரஸ் தாக்கம் இல்லை - திஸ்ஸவிதாரண

 கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களில் சடலங்கள் அதி குளிர்சாதனங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சில வாரங்கள் சென்று பீ.சிஆர். பரிசோதனை மேற்கொண்டாலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனால் அடக்கம் செய்வது அச்சுறுத்தலான விடயம் எனவும் ஒரு சிலரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அதிகுளிர்சாதனங்களில் பல வாரங்கள் இருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகளை பரிசோதித்து பாக்கும்போது, அதில் கொரோனா வைரஸ் இருக்கலாம். என்றாலும் அவை உயிருள்ளதாக இருக்காது. அதனால் மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை.



அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபரிடமிருந்து, ஆரோக்கியமான ஒருவருக்கு வைரஸ் பரவுவதாக இருந்தால், உயிருள்ள வைரஸ் குறிப்பிடத்தக்களவு பரிமாறிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் நோய்த் தொற்று ஏற்படுவது குறைவாகும்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவரின் சடலத்தில் உயிருள்ள வைரஸ் பல மணி நேரங்கள் இருக்கலாம். என்றாலும் அந்த சடலங்களை அடக்கம் செய்த பின்னர், நீருடன் கலந்து வைரஸ் பரவுவதாக விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் சடலங்களில் இருக்கும் வைரஸ் தொடர்பாக தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றார்.

நன்றி : இணையம்

சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

திடிரென ஏற்படும் இரவு நேர இறப்பை தவிர்க்க வேண்டுமா?


 டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.                       

வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ,  இரவில் எழுந்திருக்கும்  ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.                    

எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில்  திடீரென காலமானார். 

            "நேற்று, நான் அவருடன் பேசிக்  கொண்டிருந்தேன், நல்லாத்தானே  இருந்தார் அவர் ஏன் திடீரென்று  இறந்தார்?"

            காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச்  செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

           நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

       "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?

        நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், 

        மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

                 மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, 
அவை யாதெனில்?            
1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 
2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

          மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,

          உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் 
 ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

                 இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

      உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.

Amudhan mahrshvarma .
ஜனவரி 16, 2021

இரண்டு மில்லியன் பணத்தை வென்று சாதனை படைத்துள்ளார்

 




சிரச தொலைகாட்சியில் லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் 2 மில்லியன் பணத்தை வென்று சுக்ரா முனவ்வர் சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சி யானது சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆனால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இவர் காலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜனவரி, 2021

ஜனவரி 13, 2021

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்கு உரித்தாகட்டும்

 சூரியன் பகவானுக்கு தெரிவிக்கப்படும் நன்றியினை மையமாக வைத்து தமிழர்கள் தங்களுடைய தைப்பொங்கல் திருநாளை மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இன்று உலகில் திருநாளை கொண்டாடும் சகல தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.



தை பிறந்தால் வழி பிறக்கட்டும் இந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக தமிழர்களின் வாழ்வில் சிறந்த பல நல்ல வழி பிறக்கட்டும்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஜனவரி 08, 2021

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலி (றழி) அவர்களுக்கு செய்த உபதேசம்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.



“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.

1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.

2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.

3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே.

5. உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.

அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு, “நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.

2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.

3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்.

4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை பெறுவீர்.

5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள்.

ஜனவரி 08, 2021

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

 


இலங்கையில் பிறந்த ஒவ்வொரு பிரஜையும் வாக்குரிமை உள்ளவர்கள் அவர்களின் வாக்குரிமை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்குரிய உங்களின் வாக்குரிமை உள்ளதான என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய தேவை ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது அவ்வாறு பரீட்சித்து பார்ப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து உங்கள் அடையாள அட்டையின் இலக்கத்தினை வழங்குவதின் ஊடாக அதனை சரி பார்த்துக் கொள்ள முடியும் 


வாக்காளர் இடாப்பினை அறிந்து கொள்ளல்



வியாழன், 7 ஜனவரி, 2021

ஜனவரி 07, 2021

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

 மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*


S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS





ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

 

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

 

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

 

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

 

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

 

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

 

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!