Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

 'சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதியினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை மைதானமும் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். கடந்த  40 வருடமாக எந்தவிதமான அபிவிருத்தியுமில்லாது காணப்பட்ட எமது அல்மர்ஜான் மைதானத்தை, பாடசாலையின் அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க, இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு  அயராது முயற்சி செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கும்  மற்றும் அவரது இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களுக்கும்எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி



 குறிப்பு:  ஏற்கனவே சகோதரர் ARM.றபீக் (தௌபீக்) அவர்களின் முயற்சியின் பலனாக சப்றிகம வேலைத்திட்டதின் கீழ் எமது பாடசாலைக்கு நீர்ப்பாசன மற்றும் மின்சார புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 9 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 30, 2021

LinkedIn பற்றி யாருக்கு தெரியும்?

இளைஞர்களே மற்றும் நண்பர்களே!! 

நம்மில் எத்தனை பேருக்கு LinkedIn பற்றி தெரியும்? துரதிஷ்டவசமாக நம்மில் ஒரு சிலரே இதனை பாவிக்கின்றனர்.. இதுவும் ஒரு சமூக வலைத்தளமே, ஆனால் தொழில்முறை சார்ந்தது. FB or Insta போன்று தேவையில்லாத பதிவுகள் மிக மிக அரிது. அதனாலோ என்னவோ நம்மவர்கள் மத்தியில் இது பிரபலமாகவில்லை. இதன் அனுகூலங்கள் பல இருப்பினும் முக்கியமான ஒரு சிலவற்றை குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.

1. ஒரு ஆய்வின் அடிப்படையில் 93% ஆன HR மற்றும் Recruitment இற்கு பொறுப்பானவர்கள் இதனை பாவிக்கின்றனர். அவர்களை இலகுவில் இனங்கண்டு கொள்ளவும், அவர்களுடன் தொடர்பில் இருக்கவும் இது மிகவும் உதவும்.

2. தற்போது அனேகமான கம்பெனிகள் CV உடன் சேர்த்து Linkedin profile இருக்கின்றதா என கேட்கின்றனர். இல்லையென்று சொன்னால் அதுவும் நமக்கொரு minus point. நாம் update இல்லையென்று அர்த்தம். 

3. இதில் இருக்கும் மிகப்பெரிய option தான் நாம் நம்மளுடைய கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவங்களுடன் சேர்த்து நம்மிடம் இருக்கும் திறன்களை குறிப்பிடுவதாகும் நாம் குறிப்பிடும் திறனை நமது நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் confirm or endorse பண்ண முடியும். அதாவது எனக்கு MS Office தெரியுமென்று போட்டால் என்னை நன்கறிந்த பழைய கம்பெனியை சேர்ந்தவர்கள் அல்லது என்னுடன் ஒன்றாக படித்தவர்கள் வேலை பார்க்கின்றவர்கள் நான் குறிப்பிட்டது உண்மையென்று உறுதிப்படுத்தலாம். நமது profile பார்பவர்கள் இதனை பார்த்தவுடன், இவருக்கு உண்மையாகவே இந்த திறன் இருக்கிறது அதற்கு இவ்வளவு பேர் சாட்சியாக இருக்கின்றனர் என நினைப்பர். இதனால்தான் CV உடன் சேர்த்து LinkedIn உம் தற்போது கேட்கப்படுகிறது

4. தொழில்முறை சார்ந்த பல குழுக்களில் இணைந்து உங்கள் தொழில் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ளலாம்

5. நடக்கவிருக்கும் தொழில்முறை சார்ந்த கன்பரன்ஸ் மற்றும் workshop போன்ற விடயங்கள் அதிகமாக இதில் பகிரப்படும்

6. நானறிந்தவரை 90 வீதத்திற்கும் மேற்பட்ட கம்பெனி உரிமையாளர்கள் இதனை பாவிக்கின்றனர், பதிவுகளும் இடுகின்றனர். நாம் கனவிலும் பேச முடியாது, காண முடியாது, தொடர்பு கொள்ள முடியாது என நினைத்திருந்தவர்களை இதன் மூலம் மிக இலகுவாக தொடர்பு கொள்ளலாம் 

7. ஒரு கம்பெனியை பற்றியும் அது வேலை செய்பவர்கள் பற்றியும் ஆழமாக படித்துக் கொள்ள உதவும் மிகப்பெரும் சாதனம் இது.
LinkedIn பற்றி யாருக்கு தெரியும்?



இதனது பலன்கள் இன்னும் பல.. இன்னும் அறிய வேண்டுமென்றால் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இதனது அனுகூலங்களை தெரியாமல் நாம் இன்னும் நமது நேரத்தை வேறு விதமான சமூக வலைத்தளங்களில் கழிக்கின்றோம். மிகவும் பிரயோசனமான இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அனேகமான மாற்று மத சகோதரர்கள் மற்றும் கொழும்பு கண்டி போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் கூட இதனது பலனை அனுபவித்து வருகிறார்கள். நாம் இன்னும் FB like இற்கு அலைந்து திரிய கூடியவர்களாக இருக்கிறோம்.
ஜனவரி 30, 2021

மருதமுனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றல்

 பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன்  அவர்களின் பணிப்புரையின் பேரில்

இன்று அதாவது (30-01-2021)9:00 மணி அளவில் மருதமுனை வைத்திய சாலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR அஸ்மி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இன்று கொவிட் 19 தடுப்பூசி போடுகின்ற நிகழ்வு இடம் பெற்றதுஇந்த நிகழ்விலன் போது முதல் தடுப்பு ஊசியினை DR.MOH.Asmee அவர்கள் போட்டுக்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து அனைத்துப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிமார்கள் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்பதற்காகவும் மக்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு உதவியவர்கள்Dr.சுகுணன் (பிராந்திய சுகாதார அதிகாரி)DR.ஆரிப் (பிராந்திய தொற்று நோய்கள் அதிகாரி) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்கள் வைத்திய அதிகாரிdr.அஸ்மீ அவர்கள்.
மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்






ஜனவரி 30, 2021

போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!

 இலங்கை வாழ் மக்கள் கவனத்திற்கு... 


X/25 524376 என்ற தொடர் இலக்கங்களை கொண்ட 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன .!
ஒரே தாள்களை பிரதி செய்து புழக்கத்தில் விடப்பட்டடுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது . 

எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் ..! 

இந்த தகவலை உடனடியாக பகிர்ந்து (share) மற்றவர்களுக்கு உதவிடுங்கள் !
போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!


வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

 சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளமைக்கு எமது சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஒரு சிறந்த கல்வி நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். மேலும் இவரது சேவைகள் தொடரட்டும்.




சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

ஜனவரி 29, 2021

சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்

 அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்


ஜனவரி 29, 2021

பெண்கள் மறுமணம் செய்வது பாவமா? - படித்ததில் பிடித்தது

மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல 

மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல ...

காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..
நாங்கள் காலமும் செய்ய 
இங்கு ஆயிரம் உண்டு 

பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை 
உள்ளன்பு உயர் தியாகம் 
இவை இன்றி வேறில்லை 

மகர் கொடுத்து பெண்ணெடுத்து மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து 
மீண்டு வந்தால் பாவமில்லை 

#நாங்கள் 

கட்டிலினை அலங்கரிக்கும் 
பொருளுமில்லை ..
நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை
 
சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு  சாகும் வரை
 உரிமை இழக்க நாங்கள் ஒன்றும்
அடிமை இல்லை 

உள்ளத்தின் உணர்ச்சிகளை 
புரியாமல் வெறும் உடல் 
தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு 

பண்பாடு கலாச்சாரம் என்று 
சொல்லிக்கொண்டு நாங்கள் ..படும் பாடை 
சரி செய்யா சமுதாயமே....!

வந்து விட்டு உண்டு விட்டு 
சென்று விடுவீர். 
எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர்? 

காமத்தில் மட்டும் தான் 
ஆண்களின் பங்கு.
 நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு. 



மெட்டி போட்டு 
மேளம் தட்டி 
மேடை மீது தாலி கட்டி 
கையைப் பிடித்தவன் கயவன் என்றால் 
நானா பொறுப்பு??? 

முதல் வாழ்க்கை முறிதல் 
பாவமுமில்லை ....
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை

மனம் பார்த்து மணம் 
கொள்ளவன் ஆண்களின் கூட்டம். மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்.

திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
 மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல 

நாங்கள் வாழ்வில் 
தடுக்கித் தான் போனோம் 
தவறி ஒன்றும் போகவில்லை 

தோற்றாவிடியிலும் பரவாயில்லை 
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்.

ஜனவரி 29, 2021

இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!


இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!

இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவமனையில் தொடங்கும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஆறு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மீது தடுப்பூசி திட்டம் நாளை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!

இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!



கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கோடாவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் ஹேமந்தா ஹெரத் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி 29, 2021

கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!

 நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...


இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா மேலும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்இ அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர்இ குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!



கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29, 2021

விமானப் படையினரால் கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

 கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!


கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!  கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.  அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.  இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 29, 2021

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

 

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை  ஏற்றிக்கொண்ட முதல் வைத்தியர்!


இலங்கையில் கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.
கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 28 ஜனவரி, 2021

ஜனவரி 28, 2021

இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய

 இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை


புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய



நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான்  இனி எடுப்பது என்றும். P C R Positive   என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்

 Quarantine நிலையத்திலும் 4 நாள்  வீட்டிலும் இருக்கலாம் என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அன்பிஜன் பரிசோதனை ரத்து

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Note:- Antigen test என்று யாரும் கூறி வந்தால் #புதிய_சுற்றறிக்கையின் படி அவர்களுக்கு ஒத்துழைப்பு வளங்கவேண்டிய அவசியம் கிடையாது. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேசமயம் P C R test ku பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

 கொவிட்  19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது 


எனினும் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரத்தியோக வகுப்புகளில் மாணவர்களை பலவந்தமாக அணைத்துக் கொண்டு அதற்காக பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை



அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக  நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்கான ஒரு மாற்று வழியாகவே இணையவழி கற்பித்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது

இதனை தமது பிரத்தியோக வகுப்புகளுக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஇவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனவரி 27, 2021

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!

 கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு  இன்று (26) பிற்பகல் நிறைவு பெற்றது.

கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்   மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (14) வியாழன் கொடியேற்றம் ஆரம்பமாகிகடந்த 12 தினங்களாக  இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!



இதன் போது மெளலித் ஷரீப் பாராயணம்,  மற்றும் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன்  குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக   விடுபட வேண்டி  விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
  
இதன் போது உலமாக்கள்,  அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,சுகாதார பிரிவினர்  பள்ளிவாசல் நிர்வாகிகள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா  தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 27, 2021

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்


காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின்  முன் மாதிரியான செயல்பாடு...!!!!


காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடமையாற்றும் லொக் டவுன்  பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டன

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்

இவர்களில் காத்தான்குடியில் லொக்டவுன் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு   லொக் டவுன் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரிய  வெளிப்படுத்தியுள்ளனர்

இவ்வாறு 56 ஆசிரியர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் S..H. பிரதெளஸ் அவர்களிடம் குறித்த  ஆசிரியர்கள் இன்று கையளித்தனர்
சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்



இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி M.A. அதிபர் நிஹால்  கலந்து கொண்டார்

நானும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பணி புரிவதில் பெருமையடைகிறேன்.

 தனிமைப் படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை முன்மாதிரியான செயற்பாடாகும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
27.01.2021
ஜனவரி 27, 2021

குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு

 இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு -  AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?  

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள்  தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள , உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன என்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும், மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றகரமான அம்சங்களை ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது எனவும்மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் முடிவடைந்த 37 வருட பிரிவினைவாத போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச செய்தி சேவைஇது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும் ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு


மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகம் குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல் போன்றவற்றை முன்னெடுக்குமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளளது
ஜனவரி 27, 2021

கொரணா ஊசி எப்படியானது! ஒரு அனுபவ பகிர்வு

 கொரனா வக்சீன்கள் இலங்கைக்குள் வர ஆரம்பித்துவிட்டன. 


அதை போடலாமா? போடப்போடாதா?
சைட் எபக்ட் வருமா? வராதா?

இந்திய வக்சீனை நம்பலாமா? நம்பப்போடாதா?

இஸ்லாத்துல ஆகுமா? ஆகாதா?

எனக்கு இங்கே தரப்பட்டது Pfizerஇன் வக்சீனாகும். இதனை கையின் தசையினுள்ளே செலுத்தினார்கள். போட்டு அடுத்த நாள் கையை தூக்கவே முடியாத அளவு வலித்தது. அது இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது. இந்த வலி அநேகமானோருக்கு இருந்தது.

ஹொஸ்பிட்டலில் இந்த வக்சீனை போட்டுக் கொண்டோருக்கான ஒரு வட்சப் குழுமத்தில், இந்த வக்சீனை போட்டுக் கொண்டவுடன் வரக் கூடிய, உடனடி வலி போன்றவற்றை குறிப்பிடச் சொல்லியிருந்தார்கள். அதனை தொடராக அவதானித்த வகையில், 
ஒரு சிலருக்கு போட்ட நாளில் காய்ச்சல் வருகிறது. உடல் அடித்துப் போட்டாப் போல் இருக்கிறது. அடுத்த நாள் சரியாகி விடுகிறது. அநேகமாக இது 40 வயதிலும் குறைந்தோரில் அவதானித்தேன்.

ஊசி போட்டு அடுத்த நாள் சிலருக்கு காய்ச்சல் தொடங்கி, சில நாட்கள் நீடித்தன.
ஒருவருக்கு கடும் இருமலுடன் இந்த கோவிட் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் வந்தது. ஆனால் அவருக்கு கோவிட் டெஸ்ட் நெகடிவ் ஆக வந்தது. அவரும் 4 நாட்களில் குணமடைந்தார்.

 நாங்கள் இப்போது இரண்டாவது ஊசிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இனி இந்த இந்தியாட வக்சீனை நம்பலாமா என்ற கேள்விக்கு வருவோம். நமக்குத் தெரிவதெல்லாம் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்லும் மோடியின் கூத்துக்களும் அவர்களின் கரசேவகர்களின் பகுத்தறிவில்லா விளக்கங்களும்தான். அதிலும் இந்தியாவிலுருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஹீலர்களின் தொல்லை ஒரு புறம். இதெல்லாம் சேர்ந்து இந்தியாவின் வக்சீன் என்றவுடன் ஒரு நம்பிக்கையின்மை வந்தாலும், இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி வெளியில் காட்டப்படுவதில்லை.
உலகில் உற்பத்தி செய்யப்படும் வக்சீன்களில் 60%ஆனவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா உலகுக்கு செய்த மிகப் பெரும் நன்மை ஒன்று இருக்கிறது- அதுதான் மருந்துப் பொருட்களின் மீதான காப்புரிமையின் சில சரத்துக்களை ஏற்க மறுத்து, மிகவும் மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து, உலகின் அநேக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. இதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.
கொரணா ஊசி எப்படியானது!  ஒரு அனுபவ பகிர்வு



இந்த இந்தியாவின் Covishield எனப்படும் கொரனா வக்சீனானது UKஇல் தயாராகும் Oxford-AstraZeaneca vaccineஇன் பிரதியாகும். இதன் இரண்டு டோஸ்களையும் எடுப்பது கிட்டத்தட்ட 90% பாதுகாப்பளிக்கும் என ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிகிறது. எனது கருத்துப் படி இதனை எடுப்பது பாதுகாப்பானது. 

இனி எல்லாம் முடிய ஒரு கூட்டம் வரும், இஸ்லாத்தில் தொற்று நோயே இல்ல, அதால இந்த வக்சீன் எடுக்குறது எல்லாம் ஹராம் என்டுட்டு. அவங்களோட விளையாடியே நாம டயர்ட் ஆகாம, பல இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் படி, தொற்று நோய் உள்ளது என்றும், அதற்கு வக்சீன் எடுப்பது கடமை என்றும் பல பத்வாக்கள் எனது கைவசம் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக எழுதியும் உள்ளேன். இப்ப இந்த பதிவிலும் அவர்கள் வரலாம். அஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணாதவர்களுக்கு, O/L பாடத்தை விளங்கப்படுத்த முனைவது எங்களது மடமை என நினைத்து அதை கடந்து போகலாம் என்றிருக்கிறேன்.

இன்னுமொரு கூட்டம் இருக்கிறது- ஹீலர்களின் வாரிசுகள். அவர்கள் இந்தியா இலங்கை மட்டுமல்ல, இங்கேயும் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு செய்தி வருவதால் மட்டும் அது உண்மையாகி விடாது என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன். வெள்ளக்காரன் எல்லாம் கெட்டிக்காரன், வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதெல்லாம், நான் இங்கே இருக்கும் இந்த சில மாதங்களிலேயே பொய்யாகிப் போகின.

கீழே நான் வக்சீன் எடுத்துக் கொண்டதற்கான பதிவையும், காத்தான்குடியைச் சேர்ந்த VOG Dr Siraj அவர்கள் சிங்கப்பூரில் இதனை பெற்றுக் கொள்வதையும் இணைத்துள்ளேன்.

இதையெல்லாம் தாண்டியும் நான் இதனையெல்லாம் எடுக்க மாட்டேன் என்றால், அது உங்களது சுய உரிமை என்பதை ஏற்பதோடு, இந்தியாவிலிருந்து வரும் கௌமாதாவின் அற்புத நோயாக்கி நீரை பருகுமாறு பரிந்துரை செய்கிறேன்.

Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT

இந்தப் பதிவு Dr Ahamed Nihaj முக நூலில் இருந்து...!!!!
ஜனவரி 27, 2021

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது. 

    

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 

கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம். 
மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர்  தெரிவித்தார். 

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜனவரி 26, 2021

இனவாதம் பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்

 ஆட்சியை பிடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்...!!!


இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன்...!!!

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்த வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி,  சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். ஏற்கனவே  ஜனாதிபதி கோத்தபய, பிரதமர் மகிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனவாதம்  பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்



ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால்  இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாசா எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்துதொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(Anzir)

திங்கள், 25 ஜனவரி, 2021

ஜனவரி 25, 2021

பட்டப்பகலில் நடந்த சினிமா பானி துப்பாக்கிச்சூடு

 பட்டப்பகலில் வந்து துப்பாகி சூடு நடத்தும் அளவுக்கு இலங்கை நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று(25) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகடஉயன பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்டோவில் பயணித்த இருவரில் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த சினிமா பானி துப்பாக்கிச்சூடு


ஜனவரி 25, 2021

மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த படித்தவர்கள்

மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த  பேராசிய தம்பதி பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரின் மனைவி பத்மஜா பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களின் மூத்த மகள் அலேக்யா ( வயது 27) MBA படித்துவிட்டு போபாலில் வேலை பார்த்து வந்துள்ளர். இரண்டாவது மகள் சாய் திவ்யா (22) ஏ. ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கள் வீட்டில் மகள்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி புருசோத்தம் அவரின் மனைவி பத்மஜா ஆகியோர்வழிபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டில் பூஜைகள் செய்த பெற்றோர் முதலில் சாய் திவ்யாவை நிர்வாணப்படுத்தி மொட்டையடித்தனர். பிறகு மூத்த மகள் அலெக்கியாவும்  நிர்வாணப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பிறகு, உடற்பயிற்சி செய்யும் சாதனமான டம்பிள்ஸ் மூலம்  இவருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களின் உடல்களுக்கு பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  DSP. ரவி மனோகராச்சாரி கூறுகையில் புருஷேத்தம் நாயுடு வீட்டுக்கு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, வீட்டுக்குள் மகள்கள் இருவரும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து விசாரித்த போது, ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் ' என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். மேலும், போலீஸாரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளனர். பின்னர், உள்ளே புகுந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த  படித்தவர்கள்


இந்த துயர சம்பவம் குறித்து சித்தூர் DSP மனோகராச்சாரி கூறுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். தங்கள் மகள்களையும் நன்கு படிக்க வைத்து வந்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று தெரிகிறது.  அதீத பக்தியின் மூலம் அதிசயம் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.  இதனால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். தங்கள் மகள் மீண்டும் இறக்கவில்லை. ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஜனவரி 25, 2021

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா

 சுகாதார அமைச்சர் பவித்திராவுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் ஹிக்கடுவ ஹோட்டலில் தனிமையில் உள்ளார் என்பதுடன் அவரது கணவரான  காஞ்ஞன ஜயரத்தின என்பவரயும்கொறோனா தொற்றி கொண்டது.

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா


ஜனவரி 25, 2021

முழுமையாக ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!

 நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


தாம் கூறியவாறு ஒளடத பாணியை பருகியிருந்தால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் ஹிரு செய்திச் சேவை தம்மிக பண்டாரவிடம் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியான சிலந்த விஜேபால எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒளடத பாணியை பருகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தொடர்பில் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பி. ஹேவா கமகே தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

மனித உரிமை தொடர்பாக நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை கவனத்தில் எடுக்க வேண்டும் - அசாத் சாலி ...!!!!

 நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவில் பங்கேற்கும் நீதிபதி A.H.M.D. நவாஸ் தன் மீதான சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.

நீதிபதி நவாஸ் இக்குழுவில் இடம்பெறுவதானது, ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களை பாரிய மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பும் மனித உரிமை மீறல் என்பதாலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தெற்காசிய மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும் அரசின் தவறை சுட்டிக்காட்டியிருக்கின்றன.



நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற அடிப்படையில் இந்த அநீதியையும் இணைத்து அதற்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பும் அவர் மீதிருப்பதை நீதிபதி நவாஸ் நினைவில் வைத்து, அல்லாஹ்வைப் பயந்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என தாம் வேண்டிக்கொள்வதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 24, 2021

பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அண்மையில் ஒரு வேலையின் நிமித்தம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்ற போது எனது வகுப்பறைத் தோழன் நண்பன் ஐயூப்கானைச் சந்திக்கக் கிடைத்ததில் பேரானந்தம்!

உதவி மாவட்டப் பதிவாளர் காரியாலயத்தில் தனது கடமையிலிருந்த நண்பன் ஐயூப்கான் என்னைக் கண்டதும் ஓடிவந்து, ' எங்கே மச்சான் இந்தப் பக்கம்? தனக்கே உரிய தனிப்பாணியில் என் நெஞ்சில் தனது வலது முன்னங் கையால் தாக்கி சுகம் விசாரித்தார்.
அவ்வாறு தனது தனிப்பாணியில் சுகம் விசாரிப்பதுதான் நண்பர் ஐயூப்கானின் முதற்படி! அது ஐயூப்கான்.தெரிந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும்! சில நண்பர்கள் ஐயூப்கானைக் கண்டதும் இவ்வடிகளுக்குப் பயந்து ஓடி ஒழிப்பதுமுண்டு! 

இத்தனைக்கும் நண்பர் ஐயூப்கான் பொல்லாதவரும் அல்ல! சிறந்த பண்பாளன்! எவரை எந்த இடத்தில் கண்டாலும் மரியாதையோடு உரிய உறவு முறைகளை, முறைப்படி சொல்லி அழைப்பதில் முதன்மையானவர். சிறந்த ஒழுக்கப் பண்புகள் நிறைந்த, கல்விமான்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்து! இந்த முத்துக்கு வித்திட்டவர் விலேஜ் ஹெட்மேன் மர்ஹூம் ஆதம்பாவா அவர்கள். 

நண்பர்களான தாஹீர்கான், ஐயூப்கான் போன்றவர்களோடு தோட்டத்துப் பள்ளியில் படிக்கின்ற காலம் மிக இனிமையானது. அல்-அஷ்றக் காலம் அதை விட இனிமையும் பசுமையும் நிறைந்தது. அக்காலத்தில் நண்பர்களின் குடும்பத்தில்தான் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்தனர். அக்காலத்தில் ரீ சேட், றெணிங் றவுசரை இவர்கள் குடும்பத்தில்தான் அதிகமாகக் காண முடியும்! நாங்களும் அவைகளில் நனைந்ததுண்டு! சாதிக் காக்கா, உடையான் காக்கா, பசீல் காக்கா, றாஜா கான் தம்பி, இரண்டு ராத்தாமார் என்று எல்லோருமே அன்பானவர்கள்! முறக்க முடியாத குடும்பம்!
பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.


இலங்கையில் எந்த இடத்தில் கண்டாலும் அன்பு, ஆதரவுக்குப் பஞ்சமில்லை! பதறிப்போய் விழுந்து விழுந்து ஆதரிக்கும் பண்பாளர்கள்! பலமொழிகளைப் பயன்படுத்தும் சொல்லாற்றல் கொண்டவர்கள்! எந்த உயர்பதவியைக் கொடுத்தாலும் அதனை அலங்கரிக்கச் செய்யும் ஆற்றலுள்ளவர்கள்! 

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோரில் நிந்தவூர் மண் ஈன்ற ஒரே ஒரு அதிகாரக் கதிரைக்குரியவர் நண்பர் ஐயூப்கான்! இவருக்குப் பிரதேச செயலாளர் பதவி வழங்கினாலும் துணிவோடும், பணிவோடும் செய்து முடிப்பதில் வல்லவர். நண்பர் ஐயூப்கான் இன்று போல் என்றும் வாழ, எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்.
ஜனவரி 24, 2021

காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?

 கோத்தாவின் ஆட்சியில் காதி நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் : முபாற‌க் அப்துல் ம‌ஜீத் 


ஒரு சில‌ காதிமாரின் பிழையான‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ம‌ட்டும் அதிகார‌மாக‌ கொண்ட‌ காதி நீதிம‌ன்ற‌ ந‌டைமுறையை நீக்க‌ முடியாது என‌ உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றி இன்று ஊட‌க‌ங்க‌ளுக்கு கருத்து தெரிவித்த அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌  இருந்த‌ போது ஒரு சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கி பெண்க‌ளின் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ங்க‌ளைத்திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ள் எழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. இத‌ற்கு மு. கா தலைவர் ஹ‌க்கீமும்  ஆத‌ர‌வு கொடுத்த‌தன் கார‌ண‌மாக‌ இக்கோரிக்கைக‌ள் வ‌லுப்பெற‌ ஆர‌ம்பித்த‌ன‌. எந்த‌வொரு க‌ருத்தும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியின் க‌ருத்தாக‌ இருப்பின் அது ம‌க்க‌ளின் க‌ருத்தாக‌வே பார்க்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் மு. கா தலைவர் ஹ‌க்கீமின் முன்னெடுப்புக்க‌ள் ச‌மூக‌த்தின் முன்னெடுப்பாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ முடியாது என்றும் இவ்வாறு திருத்த‌த்துக்கு இட‌மளிப்ப‌து எதிர் கால‌த்தில் காதி நீதிம‌ன்ற‌ங்க‌ளையே ஒழிக்க‌ச்செய்வ‌தில் கொண்டு போய் முடியும் என்ப‌தை உல‌மா க‌ட்சி அன்றே எதிர்த்த‌து. முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்துக்கெதிரான‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளின் கோரிக்கைக‌ள் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளின் பின்ன‌ணியில் சில‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளின் நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத‌ பெண் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளும் இருப்ப‌தை க‌ண்டோம். 

இத‌ன் பின்ன‌ணியில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கொண்டு வ‌ர‌ வேண்டிய‌ திருத்த‌ங்க‌ளை ஆராய‌ க‌ட‌ந்த‌  அர‌சாங்க‌ம் இர‌ண்டு குழுக்க‌ளை நிய‌மித்த‌து. இந்த‌  இர‌ண்டு குழுக்க‌ளின் மாறுப‌ட்ட‌ அறிக்கைக‌ள் நாட்டில் பேசு பொருளான‌ போது இவ்விர‌ண்டு அறிக்கைக‌ளையும் ப‌கிர‌ங்க‌மாக‌ நிராக‌ரித்த‌ நாம் க‌ண்டித்த‌  எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போவ‌து காதி நீதிம‌ன்ற‌  ந‌டைமுறையையே இல்லாம‌ல் செய்வ‌தில் முடியும் என‌ எச்ச‌ரித்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

இறைவ‌ன் உத‌வியால் க‌ட‌ந்த‌ ஆட்சியில் இது எதுவும் ந‌டை பெற‌வில்லை. இப்போது இந்த‌ ஆட்சியில் சில‌ இன‌வாதிக‌ள் காதிநீதிம‌ன்ற‌த்தை ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுப்ப‌தும் க‌ட‌ந்த‌ கால‌ மீதிகளே.

இந்த‌ நாட்டில் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌மே இன்ன‌மும் உள்ள‌து. நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளான‌ கிரிமின‌ல், சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்து ம‌க்க‌ளுக்கும் ஒன்றாக‌வே உள்ள‌து. திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ம‌ட்டும் க‌ண்டிய‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌ம், யாழ்ப்பாண‌ தேச‌ வ‌ழ‌மை ச‌ட்ட‌ம், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என‌ உள்ள‌ன‌. இவை திரும‌ண‌த்துட‌ன் ம‌ட்டுமே தொட‌ர்பு ப‌ட்ட‌தாகும்.  எவ்வாறு பொலிஸின் கீழ் சாம‌ ம‌ண்ட‌ல‌ எனும் ச‌மாதான‌ நீதவான் ம‌ன்ற‌ம் உள்ள‌தோ  அது போன்ற‌ பெரிய‌ அதிகார‌ம் எதுவும‌ற்ற‌ நீதிம‌ன்ற‌மே காதி நீதிம‌ன்ற‌மாகும். அத‌ன் ச‌ட்ட‌ங்க‌ள், ந‌டைமுறைக‌ள் என்ப‌ன‌ பொதுவான‌ நீதி ம‌ன்ற‌ ச‌ட்ட‌த்தின் கீழேயே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌த்தின் கீழேயே உள்ள‌ன‌.

சில‌ காதி நீதிவான்க‌ள் பிழையாக‌, ஊழ‌ல்வாதிக‌ளாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டை சில‌ர் முன் வைக்கின்ற‌ன‌ர். பொதுவாக‌ எல்லா நிர்வாக‌த்திலும் த‌வ‌றான‌வ‌ர்க‌ள், ஊழ‌ல்வாதிக‌ள் உள்ள‌ன‌ர்.  சில‌ நீதிப‌திக‌ள், பொலிசார் மீது கூட‌ ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டுக்க‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ முழு நீதி ம‌ன்ற‌ க‌ட்ட‌மைப்பையும் ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கூற‌ முடியாது. ஊழ‌ல்வாதிக‌ளை, க‌ட்டுப்ப‌டுத்த‌வே பொலிஸ், ஊழ‌ல், ல‌ஞ்ச‌ த‌டுப்பு ச‌ட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றில் முறையிட‌ முடியும். க‌ட‌ந்த‌ ஆட்சி முழுக்க‌ முழுக்க‌ ஊழ‌ல்வாதிக‌ளாலும், மோச‌டிக்கார‌ர்க‌ளாலும் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் ம‌க்க‌ளுக்கு நீதி கிடைக்காத‌தால் இவை பாரிய‌ பிர‌ச்சினைக‌ளாக‌ தெரிந்த‌ன‌.
காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?



ஆனால் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ த‌லைமையில் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் ஊழ‌ல்வாதிக‌ளும், ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌வ‌ர்களும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தையும், திற‌மைசாலிக‌ளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை காண்கிறோம். இத்த‌கைய‌ சிற‌ப்பான‌ ஆட்சியில் காதிமார் நேர்மைக்கு மாற்ற‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியாது என்ப‌தால் காதி நீதி ம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் என‌ நாம் ந‌ம்புகிறோம். அந்த‌ வ‌கையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திலோ, காதி நீதிம‌ன்ற‌ ந‌டவ‌டிக்கைக‌ளிலோ எத்த‌கைய‌ திருத்த‌த்தையோ, மாற்றுத‌லையோ கொண்டு வ‌ர‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நூருல் ஹுதா உமர்.
ஜனவரி 24, 2021

எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.

 சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வயின்னாயிலஹி ராஜியுன் 

வித்தகர் விருது பெற்று விடைபெற்றார்.

அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.



யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திற்திற்றேன்.
ஜனவரி 24, 2021

என்றும் எல்லோர் மனதிலும் இருக்கும் வரக பொல அபுல் ஹசன் ஹாஜியார்




இலங்கையின் இரண்டாவது பிரதமர் டட்லி சேனாநாயக்க கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு மீரிகம திரும்பிய போது அவரது தந்தை DSசேனாநாயக்க தனது மகனை வரகாபொல அபுல் ஹஸன் ஹாஜியாரிடம் அனுப்பிவைத்து " எனது மகனுக்கு நல்ல ஒரு ஆசானாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருப்பீர்கள்" என்ற நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பதாகக் கூறியிருந்தார்".

அபுல்ஹஸன் ஹாஜியார்.

1.வரகாபொல பொலிஸ்நிலையத்திற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியவர்.

2.கள்எலிய முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்களில ஒருவர்.

3. வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் காணியை வழங்கியவர்

4.தாருல் ஹஸனாத் 8 ஏக்கர் காணியை அன்பளிப்பாக வழங்கியவர் 

5.வரகாபொல டவ்ன் ஜும்ஆ பள்ளிவாசலின் காணிகளை வழங்கியவர்.

6. வேவல்தெனிய பள்ளிவாசல் காணியை வழங்கியவர்.

7. ஹஸன்புர வீடமைப்புத்திட்டம்

8. வரகாபொல மற்றும் கணிதபுர பள்ளிவாசல்களுக்காக தனது சொந்தக் கடைகளை வக்ப் செய்தவர்.

 9. சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு கூடதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

10. மக்காவில் உள்ள  பைதுல் பாஸியைச் சேர்ந்த இமாம் டாக்டர் இப்றாஹீம் அல்பாஸி அவர்களின் ஆன்மீக வழிகாட்டலோடு இலங்கையர்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

வல்லநாயன் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாகவும்.
ஜனவரி 24, 2021

பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு

 (றியாத் ஏ.மஜீத்)


சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.

கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.

இவர் சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் ஜப்பார் தம்பதியினரின் புதல்வியாவார். கணவர் எம்.ஐ.எம்.லரீப் பொது கணக்கு பரிசோதகராவார்.



சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.நஜிமுதீன் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.