கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது
எனினும் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரத்தியோக வகுப்புகளில் மாணவர்களை பலவந்தமாக அணைத்துக் கொண்டு அதற்காக பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்கான ஒரு மாற்று வழியாகவே இணையவழி கற்பித்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது
இதனை தமது பிரத்தியோக வகுப்புகளுக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஇவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக