Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

விசித்திரமான கடற்கரையை நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக  20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்


முற்றுமுழுதாக வனத்தால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சி தரும்  இந்த கடற்கரை   பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது

இந்த கடற்கைரைய சூழவுள்ள வனப்பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான இலங்கையில் அருகி வரும் குரங்கினம் என அண்மைய ஆய்வில் அறியப்பட்டுள்ள ஊதா நிற முகம் கொண்ட லங்கூர் என்ற குரங்கு இனங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன
இது பொதுவாக கூச்ச சுபாவம் உள்ள குரங்கினங்கள் ஆகும்
விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)


விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)








ஆகவே இந்த குரங்குகளிடமிருந்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்

இது போன்ற மேலும் பல தகவல்களை பெற எமது பக்கத்தை  Like செய்யுங்கள்

 உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்
பிப்ரவரி 03, 2021

கல்முனையில் இரண்டாம் கட்ட பட்டதாரி பயிலுனர் நியமனம் வைப்பு...!

 பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் கல்முனையில் வழங்கி வைப்பு...!


அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நியமனத்தில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு் செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந் நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!

கல்முனையில்   இரண்டாம் கட்ட  பட்டதாரி பயிலுனர் நியமனம்  வைப்பு...!



இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்
எம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)
பிப்ரவரி 03, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது


பிப்ரவரி 03, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்பது 

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்பில் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.


வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. 


போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர ( மட்டம் - 2 )  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இப் பயிற்சி வகுப்பின் மூலம் தங்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரச கரும மொழிப் பயிற்சி - இரண்டாம் மொழி


பிப்ரவரி 02, 2021

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


(யு.எம்.இஸ்ஹாக்,சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அண்மையில் எழுதி வெளியிட்ட "நிதி முகாமைத்துவம் " நிதிப்பிரமாணங்களும் ,நிதி நடைமுறைகளும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. 
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் கல்வியியலாளர்களை கெளரவப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறுமதி வாய்ந்த இந்த நூலை வெளியிட்டு வைத்ததை முன்னிட்டு கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்வை அவரது வீடு தேடி சென்று வாழ்த்தி நினைவு சின்னம் , நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.

நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையிலான அமைப்பின் குழுவினர் நேற்று இரவு கணக்காளரின் வீட்டுக்கு சென்று இந்த பாராட்டு நிகழ்வை நடாத்தினர்.
நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் , கணக்காளர் ஹபீபுல்லாவுக்கு வீடு தேடிச்சென்று கெளரவிப்பு..


பாராட்டைப் பெற்ற கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில் நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன் பல கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றேன் ஆனால் என்னை வீடு தேடிவந்து பாராட்டிய இந்த நிகழ்வு என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது . இதனை என் வாழ்வில் ஒரு போதும் மறந்து விட முடியாது. இதற்காக நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பினருக்கு உள்ளார்த்தமான நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அதிபர்களான வீ.எம்.ஸம்ஸம் ,ஏ.எம்.சாலிதீன் மௌலவி ,திருமதி ஏ.முனாஸிர்,ஆசிரியர் ஏ.எல்.அஷ்ரப் , அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
பிப்ரவரி 02, 2021

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு

 65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு



1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

2. வேகமாக திரும்பாதீர்கள்.

3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

7. பின்புறமாக நடக்காதீர்கள்.

8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.

9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.

10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.

2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.


3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

இது உபயோகமானது எனக் கருதினால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பிப்ரவரி 02, 2021

பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை

 இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார்.

 இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை



பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.

யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.

அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 02, 2021

மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள

 மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள சமரவீர..!


மியன்மாரில் ஜனநாயக நிர்வாகத்தைக் கவிழ்த்து இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள


அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘சிவில் மற்றும் நிர்வாக அதிகாரங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்போது, மக்கள் ஆணைக்கு வலுச்சேர்க்கின்ற தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் செயற்பாடுகள முடிவிற்குக்கொண்டு வருவதற்கு அவர்கள் முற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இது மியன்மாரில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்


பிப்ரவரி 02, 2021

பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா பரிசோதனை...!

 இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!


அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் என்டிஜன் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களைஅகடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை...!

கொரோனா பரிசோதனை...!

கொரோனா பரிசோதனை...!


பிப்ரவரி 02, 2021

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!

 இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...! 
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் என்டிஜன் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களைஅகடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!








பிப்ரவரி 02, 2021

இளம் வைத்தியர் கொரணாவால் உயிரழப்பு

 இலங்கையில் சுகாதாரத் துறையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கொய்யா காரணமாக மரணமடைந்துள்ளார் Rest in Peace Dr. Gayan Danthanarayana, first medical officer died for .Covid 19 இலங்கையில் முதலாவது இளம் வைத்தியர் .Dr.Gayan Danthanarayana..கொரொனா தொற்று காரணமாக மரணம் அடைந்த து கவலையளிக்கிறது

(Dr.gayan.மனைவியுடன்..)
Dr!