தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது.
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம்.
மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக