இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு - AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?
இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள , உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன என்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும், மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றகரமான அம்சங்களை ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது எனவும்மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது
இலங்கை அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் முடிவடைந்த 37 வருட பிரிவினைவாத போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச செய்தி சேவைஇது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும் ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகம் குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல் போன்றவற்றை முன்னெடுக்குமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளளது




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக