Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 6 ஜனவரி, 2021

2021ல் கிழக்கு மாகாணப் பாடசாலை தொடங்குவது தொடர்பான அதிபர்களுக்கான அறிவித்தல்

மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் நேரலை மூலம் கூட்டம் (online meeting) நடத்தப்பட்டு. பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டது

தரம் 1 தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்கு 11ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்தல் (தரம் 1 வகுப்பு மட்டும் பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பித்தல்)

11-ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோர்களை அழைத்து சுகாதார வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை தெளிவுபடுத்துவதுடன் சுகாதார ரீதியாக வருகின்ற சீர்கேடுகளுக்கு பாடசாலை அதிபரை பொறுப்பு என்பதையும் வலியுறுத்தல்

மாணவர்கள் கட்டாயமாக பாடசாலைக்கு வரும்பொழுதும் வெளிச் செல்லும் போது

 1.மாஸ்க் அணிதல், 2.கைகளை கழுவுதல்,

3. சமூக இடைவெளியை பேணுதல்

ஆகியவை முக்கியமானவையாகும்

குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கையிலான வகையில் வகுப்புகளை ஒழுங்கு படுத்தி உரிய பிரிவினருக்கான பாடங்களை கற்பித்தல்

மாணவர்கள்  பாடசாலையை விட்டு வெளியேறும் போதும் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்தால் கட்டாயமானதாகும்

வகுப்பறையில் சமூக இடைவெளியை பேணி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கு செய்தல்

1,2,3 ஆகிய தவணைப் பரீட்சை நடத்தப்படமாட்டாது போன்ற விடயங்களை பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் சுகாதார ரீதியான பிரச்சினைகள் எழுகின்ற பொழுது அதற்கு உரிய பாடசாலை அதிபரை பொறுப்பு என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

தகவல் - வலயக்கல்விப் பணிப்பாளர் - மூதூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக