Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வியாழன், 7 ஜனவரி, 2021

SLBCயின் பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் நியமனம்


(பி.எம்.எம்..காதர்)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள பிறை எப்.எம்.வானொலின் கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றி மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளராகத்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கடந்த 15 வருடங்களாக பிறை எப்.எம்.வானொலியின் கட்டப்பாட்டாளராகக் கடமையாற்றிய நிலையிலேயே 2020-12-16ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1968-02-05ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனையைச் முகம்மது பஷீர் உம்மு சல்மா தம்பதியின் மூன்றாவது புதல்வராவார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி பேராதனை பல்கலைக் கழகத்தில் கற்று கலைப் பட்டதாரியாக வெளியேறினார்.

1987ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மன்றத்தின் தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்று அப்போதய ஜனாதிபதி ஜே.ஆர் ஜவர்த்தன விடமிருந்து ஜனாதிபதி விருதைப் பெற்றார்.

1990ஆம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்று அப்போதய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவிடமிருந்து ஜனாதிபதி விருதைப்பெற்றார்.

1992ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்தார்.1994ஆம் ஆண்டு வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார்.

1996ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் பெற்று வர்த்தக சேவையின் தயாரிப்பாளரானார்.2004ஆம் ஆண்டு   அமைப்பாளராகவும்,2009ஆம் ஆண்டு சிரேஷ்ட அமைப்பாளராகவும் உயர்வு பெற்றார்.

2005ஆம் இலங்கை ரூபவாஹினியிலும் செய்தி வாசிப்பாளராவும் கடமையாற்றினார்.  அக்கரைப் பற்றில் 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிறை எப்.எம்.வானொலியின் பதில் கட்டுப்பாட்டாளராக நியமனம் பெற்று 2013ஆம் ஆண்டு கட்டுப்பாட்டாளராக நிரந்த நியமனம் பெற்றார்.

கடந்த 15 வருடங்களாக கடமையாற்றி வந்த நிலையிலேயே பிரதிப் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக