எதிர்காலத்திற்கானவிதைகள் திட்டமானது, இலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தமூன்றாம் நிலை மாணவர்கள், தகவல்தொழில்நுட்பத் துறை குறித்த அறிவைபெற்றுக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் அவர்கள், தகவல்தொழில்நுட்ப தொழிற்துறை மற்றும் Huawei நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவைப் பெறவழிவகுக்கின்றது. இதில் 5 மாகாணங்களிலுள்ள, 10 பல்கலைக்கழகங்களைச்சேர்ந்த 16 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போதுகருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜீ.எல். பீரிஸ் "கல்வித்துறையின் வளர்ச்சிக்கும், தற்போதைய உலகளாவிய சூழலில் அறிவு பரிமாற்றத்திற்கும்தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிற்றல் தொழில்நுட்பம்என்பன மிக முக்கியமான இடத்தைவகிக்கின்றன. எனவே இலங்கை அரசாங்கம், எதிர்கால தலைமுறையினர் மற்றும் அவர்களின் கல்வியின்வளர்ச்சிக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும்டிஜிற்றல் தொழில்நுட்பங்களில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது" என்றார்.
Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிலியாங் யி கருத்துத் தெரிவிக்கையில், "இத்திட்டமானது, இலங்கை மாணவர்கள், தகவல்தொழில்நுட்பத் துறையை நன்கு புரிந்துகொள்ளவும், உங்கள் தகவல் தொழில்நுட்ப அறிவுமற்றும் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என, நான்நம்புகிறேன். இது நீங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளஉங்கள் எல்லையை மேலும் விரிவாக்குவதற்கும்சீனாவைப் பற்றிய உங்கள் புரிதலைஆழமாக்குவதற்கும் உதவும். இலங்கை பல்கலைக்கழகங்களுடனானஎங்கள் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்.” எனத் தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்கால தொழில்துறை வாழ்க்கை சிறப்புற அமைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக