Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

திங்கள், 4 ஜனவரி, 2021

தேங்காய் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி

 
இந்தியா, பிலிபைன்ஸ், வியட்நாமிலிருந்து தேங்காய் இறக்குமதி  தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில்தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய தொழிற்துறையினர்எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளும் வகையில் தேங்காய் இறக்குமதிசெய்யப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்து அதிகாரசபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்தார்.

இந்தியா, பிலிபைன்ஸ் மற்றும் வியட்நாமிலிருந்து தேங்காய்இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

தேங்காய்தட்டுப்பாட்டிற்கு குறுங்கால தீர்வு வழங்கும் நோக்குடன்வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வாரமளவில் நாட்டிற்கு தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என தெங்கு அபிவிருத்துஅதிகார சபையின் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உலர்ந்ததேங்காய்களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

கடந்த வருடம் நிலவிய சீரற்றவானிலை காரணமாக தேங்காய் செய்கையில்வீழ்ச்சி ஏற்பட்டதுடன், நாட்டில் தேங்காய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால்70 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை தேங்காய்விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக