Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வெள்ளி, 8 ஜனவரி, 2021

உங்கள் கையடக்கத் தொலைபேசி இலங்கையில் பதிவு செய்யப்பட்டதா?

எதிர்காலத்தில் நாம் இலங்கையில் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையில் உள்ள தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியமாகும். அவ்வாறு பதிவு செய்யப்படாத தொலைபேசிகளில் இலங்கையில் உள்ள சிம் அட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை  ஏற்படும். எனவே, உங்கள்  கையடக்க தொலைபேசியில் உள்ள  IMEI இலக்கத்தினை பரீட்சித்துப் பார்ப்பதன் ஊடாக அதனை அறிந்து கொள்ள முடியும். 


அதனை எவ்வாறு பரீட்சித்துப் பார்க்கலாம் என்பதை கீழே தரப்பட்டுள்ள விபரங்களை சரியான முறையில் அனுப்புவதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. 

அதனை எவ்வாறு பரீட்சித்துப் பார்ப்பது? 

உங்கள் கையடக்கத் தொலைபேசியில்  *#06#   Dial  பண்ணினால் 15 இலக்கங்களைக் கொண்ட  IMEI  வரும்.  அதனை கீழே தரப்பட்டுள்ள அமைப்பில் 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால். உங்களின் கைபேசி பதிவு செய்யப்பட்டதா? இல்லையா? என்ற விபரங்கள் உங்களுக்கு உடன் அனுப்பி குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். 



நீங்கள் அனுப்ப வேண்டிய குறுந்தகவலின் அமைப்பு கீழே 

IMEI <Space> <15 digit imei>  என டைப் செய்து 1909 என்ற இலக்கத்திற்கு குறுந் தகவல் அனுப்பவும் .


உங்கள் IMEI இலக்கம் அங்கரிக்கப்பட்டிருந்தால் .

Registered IMEI 3504381330602   No TRC20/14315 120/1910018721


உங்கள் IMEI இலக்கம் அங்கரிக்கப்படாதிருந்தால்.

Unregistered IMEI  356172076650636  Contact seller if locally purchased after 01.01.2021 Registration is not required if used in Srilanka before 31.12.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக