திருமலையில் உள்ள சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் ஒன்று சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளப்வைக் கொண்ட நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பயணிகத்தினால் அண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக 1950ம் ஆண்டுகளில் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
உலக சந்தையில் தற்போது தங்கத்தின் பெறுமதி அதிகரிப்பதுடன், இதனை உரிய முறையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொண்டால் இலங்கைக்கு பல வழிகளில் பொருளாதார ரீதியாக பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கருத்து தெரிவித்துள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக