Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

 'சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதியினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை மைதானமும் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். கடந்த  40 வருடமாக எந்தவிதமான அபிவிருத்தியுமில்லாது காணப்பட்ட எமது அல்மர்ஜான் மைதானத்தை, பாடசாலையின் அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க, இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு  அயராது முயற்சி செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கும்  மற்றும் அவரது இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களுக்கும்எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி



 குறிப்பு:  ஏற்கனவே சகோதரர் ARM.றபீக் (தௌபீக்) அவர்களின் முயற்சியின் பலனாக சப்றிகம வேலைத்திட்டதின் கீழ் எமது பாடசாலைக்கு நீர்ப்பாசன மற்றும் மின்சார புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 9 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 30, 2021

LinkedIn பற்றி யாருக்கு தெரியும்?

இளைஞர்களே மற்றும் நண்பர்களே!! 

நம்மில் எத்தனை பேருக்கு LinkedIn பற்றி தெரியும்? துரதிஷ்டவசமாக நம்மில் ஒரு சிலரே இதனை பாவிக்கின்றனர்.. இதுவும் ஒரு சமூக வலைத்தளமே, ஆனால் தொழில்முறை சார்ந்தது. FB or Insta போன்று தேவையில்லாத பதிவுகள் மிக மிக அரிது. அதனாலோ என்னவோ நம்மவர்கள் மத்தியில் இது பிரபலமாகவில்லை. இதன் அனுகூலங்கள் பல இருப்பினும் முக்கியமான ஒரு சிலவற்றை குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.

1. ஒரு ஆய்வின் அடிப்படையில் 93% ஆன HR மற்றும் Recruitment இற்கு பொறுப்பானவர்கள் இதனை பாவிக்கின்றனர். அவர்களை இலகுவில் இனங்கண்டு கொள்ளவும், அவர்களுடன் தொடர்பில் இருக்கவும் இது மிகவும் உதவும்.

2. தற்போது அனேகமான கம்பெனிகள் CV உடன் சேர்த்து Linkedin profile இருக்கின்றதா என கேட்கின்றனர். இல்லையென்று சொன்னால் அதுவும் நமக்கொரு minus point. நாம் update இல்லையென்று அர்த்தம். 

3. இதில் இருக்கும் மிகப்பெரிய option தான் நாம் நம்மளுடைய கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவங்களுடன் சேர்த்து நம்மிடம் இருக்கும் திறன்களை குறிப்பிடுவதாகும் நாம் குறிப்பிடும் திறனை நமது நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் confirm or endorse பண்ண முடியும். அதாவது எனக்கு MS Office தெரியுமென்று போட்டால் என்னை நன்கறிந்த பழைய கம்பெனியை சேர்ந்தவர்கள் அல்லது என்னுடன் ஒன்றாக படித்தவர்கள் வேலை பார்க்கின்றவர்கள் நான் குறிப்பிட்டது உண்மையென்று உறுதிப்படுத்தலாம். நமது profile பார்பவர்கள் இதனை பார்த்தவுடன், இவருக்கு உண்மையாகவே இந்த திறன் இருக்கிறது அதற்கு இவ்வளவு பேர் சாட்சியாக இருக்கின்றனர் என நினைப்பர். இதனால்தான் CV உடன் சேர்த்து LinkedIn உம் தற்போது கேட்கப்படுகிறது

4. தொழில்முறை சார்ந்த பல குழுக்களில் இணைந்து உங்கள் தொழில் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ளலாம்

5. நடக்கவிருக்கும் தொழில்முறை சார்ந்த கன்பரன்ஸ் மற்றும் workshop போன்ற விடயங்கள் அதிகமாக இதில் பகிரப்படும்

6. நானறிந்தவரை 90 வீதத்திற்கும் மேற்பட்ட கம்பெனி உரிமையாளர்கள் இதனை பாவிக்கின்றனர், பதிவுகளும் இடுகின்றனர். நாம் கனவிலும் பேச முடியாது, காண முடியாது, தொடர்பு கொள்ள முடியாது என நினைத்திருந்தவர்களை இதன் மூலம் மிக இலகுவாக தொடர்பு கொள்ளலாம் 

7. ஒரு கம்பெனியை பற்றியும் அது வேலை செய்பவர்கள் பற்றியும் ஆழமாக படித்துக் கொள்ள உதவும் மிகப்பெரும் சாதனம் இது.
LinkedIn பற்றி யாருக்கு தெரியும்?



இதனது பலன்கள் இன்னும் பல.. இன்னும் அறிய வேண்டுமென்றால் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இதனது அனுகூலங்களை தெரியாமல் நாம் இன்னும் நமது நேரத்தை வேறு விதமான சமூக வலைத்தளங்களில் கழிக்கின்றோம். மிகவும் பிரயோசனமான இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அனேகமான மாற்று மத சகோதரர்கள் மற்றும் கொழும்பு கண்டி போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் கூட இதனது பலனை அனுபவித்து வருகிறார்கள். நாம் இன்னும் FB like இற்கு அலைந்து திரிய கூடியவர்களாக இருக்கிறோம்.
ஜனவரி 30, 2021

மருதமுனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றல்

 பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன்  அவர்களின் பணிப்புரையின் பேரில்

இன்று அதாவது (30-01-2021)9:00 மணி அளவில் மருதமுனை வைத்திய சாலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR அஸ்மி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இன்று கொவிட் 19 தடுப்பூசி போடுகின்ற நிகழ்வு இடம் பெற்றதுஇந்த நிகழ்விலன் போது முதல் தடுப்பு ஊசியினை DR.MOH.Asmee அவர்கள் போட்டுக்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து அனைத்துப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிமார்கள் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்பதற்காகவும் மக்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு உதவியவர்கள்Dr.சுகுணன் (பிராந்திய சுகாதார அதிகாரி)DR.ஆரிப் (பிராந்திய தொற்று நோய்கள் அதிகாரி) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்கள் வைத்திய அதிகாரிdr.அஸ்மீ அவர்கள்.
மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்






ஜனவரி 30, 2021

போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!

 இலங்கை வாழ் மக்கள் கவனத்திற்கு... 


X/25 524376 என்ற தொடர் இலக்கங்களை கொண்ட 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன .!
ஒரே தாள்களை பிரதி செய்து புழக்கத்தில் விடப்பட்டடுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது . 

எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் ..! 

இந்த தகவலை உடனடியாக பகிர்ந்து (share) மற்றவர்களுக்கு உதவிடுங்கள் !
போலி 500 ரூபா பண பணப்புழக்கம் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல்!


வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

 சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளமைக்கு எமது சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஒரு சிறந்த கல்வி நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். மேலும் இவரது சேவைகள் தொடரட்டும்.




சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

ஜனவரி 29, 2021

சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்

 அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்


ஜனவரி 29, 2021

பெண்கள் மறுமணம் செய்வது பாவமா? - படித்ததில் பிடித்தது

மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல 

மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல ...

காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..
நாங்கள் காலமும் செய்ய 
இங்கு ஆயிரம் உண்டு 

பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை 
உள்ளன்பு உயர் தியாகம் 
இவை இன்றி வேறில்லை 

மகர் கொடுத்து பெண்ணெடுத்து மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து 
மீண்டு வந்தால் பாவமில்லை 

#நாங்கள் 

கட்டிலினை அலங்கரிக்கும் 
பொருளுமில்லை ..
நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை
 
சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு  சாகும் வரை
 உரிமை இழக்க நாங்கள் ஒன்றும்
அடிமை இல்லை 

உள்ளத்தின் உணர்ச்சிகளை 
புரியாமல் வெறும் உடல் 
தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு 

பண்பாடு கலாச்சாரம் என்று 
சொல்லிக்கொண்டு நாங்கள் ..படும் பாடை 
சரி செய்யா சமுதாயமே....!

வந்து விட்டு உண்டு விட்டு 
சென்று விடுவீர். 
எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர்? 

காமத்தில் மட்டும் தான் 
ஆண்களின் பங்கு.
 நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு. 



மெட்டி போட்டு 
மேளம் தட்டி 
மேடை மீது தாலி கட்டி 
கையைப் பிடித்தவன் கயவன் என்றால் 
நானா பொறுப்பு??? 

முதல் வாழ்க்கை முறிதல் 
பாவமுமில்லை ....
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை

மனம் பார்த்து மணம் 
கொள்ளவன் ஆண்களின் கூட்டம். மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்.

திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
 மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல 

நாங்கள் வாழ்வில் 
தடுக்கித் தான் போனோம் 
தவறி ஒன்றும் போகவில்லை 

தோற்றாவிடியிலும் பரவாயில்லை 
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்.