மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது அரசாங்கத்திற்கு ஆறரைக் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழங்கறிஞர் செல்வி நிஷாரா ஜயரத்தன மன்றில் தெரிவித்தார். 11 கைதிகள் உயிரிழந்தவர்களின் 3 சடலங்களை அரச செலவினத்தில் அடக்கம் செய்யுமாறு நீதவான் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
இதில் உயிரிழந்த மூன்று பேருக்கு கொரனா தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் உறவினர்கள் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும் உத்தரவிட்டள்ளார்.
இதில் உயிரிழந்த 11 பேரும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரழந்துள்ளார்கள் என்பதை புத்திஜீவிகள் குழுவின் அறிக்கையிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் 8 பேர் மாத்திரமே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் தினமொன்றில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இரகசியப் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக