பத்து வருட காலம் நிரந்தர சேவையில் இருந்தால் ஓய்வூதியம் பெறலாம். ஆண்களுக்கு 55வயதாகவேண்டும். ஆசிரியைகள், தாதிகள், பெண் பொலிஸார் 50வயதில் அல்லது 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றால் அன்றே ஓய்வூதியம் கிடைக்கும். 24மாத கால கழிக்கப்படாத ஓய்வூதியத்தைப் பணிக்கொடையாகப் பெற்றுக்கொண்டால் 10 வருடங்களுக்கு கழிக்கப்பட்ட ஓய்வூதியம் தான் கிடைக்கும். 30 வருட சேவையின் பின்னரே இத்துடன் உள்ள அட்டவணையில் உள்ளது போல சம்பளத்தின் படி குறிப்பிட்ட வீதம் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். 30 வருடங்களுக்கு குறைந்த சேவைக்காலம் இருந்தால் வருடமொன்றுக்கு 2% குறையும்..
மிக எளிய உதாரணம் ஒன்றைத் தரலாம்- 20,000/= சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கும் 28 வருடச் சேவைக் காலத்தைக் கொண்ட ஒரு அரசாங்க ஊழியர் 55 வயதில் ஓய்வு பெற்றால் மாதாந்த ஓய்வூதியம் 75% என்ற அடிப்படையில் 15,000/= கிடைக்கும். இத்துடன் 3,675/= படியும் உண்டு. அத்தோடு
20,000/=x85%x 24 =4,08,000/= என்ற தொகையில் பணிக்கொடையும் கிடைக்கும். இத்துடன் உள்ள அட்டவணையைப் பார்த்தால் இவைகளை இலகுவாகக் கணித்துக் கொள்ளலாம். இவர் 30 வருடங்கள் சேவைக் காலத்தைக் கொண்டு இருந்தால் 79% என்ற அடிப்படையில் 15,800/= மாதாந்த ஓய்வூதியம் கிடைக்கும் .
இலங்கை அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியக் கழிவுகள்
நிரந்தர அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் மாதாந்தம் ஒரு தொகை விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதிக்காகக் கட்டாயமாகக் கழிக்கப்படும். இது உங்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக அல்ல. உங்களுக்குப் பின்னர் உங்கள் சட்டப்பூர்வமான வாழ்க்கைத் துணை அல்லது உங்களது அநாதையான பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கவே இது சம்பளத்தில் பின்வரும் வீதத்தில் கழிக்கப்படுகின்றது
• ஆரம்ப, இரண்டாம் நிலை மட்டங்கள் - 6% (சிற்றூழியர், ஆசிரியர், லிகிதர் ,……
• மூன்றாம்,சிரேட்ட நிலை மட்டங்கள் 7% (அதிபர், தாதி, நிருவாக சேவை அதிகாரிகள் ,……
நீங்கள் ஓய்வு பெறும்போது திருமணம் முடித்திராது அல்லது வாழ்க்கைத் துணை 26 வயதிற்கு குறைந்த தொழில் இல்லாத, திருமணம் முடிக்காத பிள்ளைகள் இல்லாவிட்டால் செலுத்திய நிதியை 2% வட்டியுடன் மீளப் பெறலாம்.
நன்றி..




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக