தெற்காசியாவிலேயே மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை மூலம் நாட்டிற்கு பல வகையில் பொருளாதார ரீதியாக நன்மைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக